classic
stringlengths
19
1.22k
Description
stringlengths
5
2.28k
முடி மன்னர் ஆய் மூ உலகம் அது ஆள்வர்\nஅடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்\nமுடி மன்னர் ஆய் நின்ற தேவர்கள் ஈசன்\nகுடி மன்னர் ஆய் குற்றம் அற்று நின்றாரே
கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக இருப்பவர்கள் தேவ லோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் இருக்கின்ற பல நாடுகளை ஆட்சி செய்வார்கள். ஆனால், இறைவனது திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று வைத்து இருக்கின்றவர்கள் அடைகின்ற பேரின்பத்திற்கு அளவு என்பதே இல்லை கேட்டுக் கொள்ளுங்கள். ஆகவே மலங்கள் இருப்பதாலேயே கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக நிற்கின்ற தேவர்கள் கூட இறைவனின் திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் குடி வைத்த மன்னர்களாக இருந்தால் எந்த விதமான மலங்களும் இல்லாமல் நிற்பார்கள்.
கழல் ஆர் கமல திருவடி என்னும்\nநிழல் சேர பெற்றேன் நெடு மால் அறியா\nஅழல் சேரும் அங்கி உள் ஆதி பிரானும்\nகுழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே
சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று உணரப் படுகின்ற நிழலோடு யானும் சேர்ந்து இருக்கும் படி இறைவனது திருவருளால் பெற்றேன். நீண்ட நெடும் அண்ணாமலையாக திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதியோடு சேருகின்ற எமக்குள் இருக்கின்ற ஜோதியின் உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு சேர்ந்த தலை முடியுடன் எமது உயிரும் சேர்ந்து அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம்.
மேல் வைத்த ஆறு செயா விடில் மேல் வினை\nமால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும்\nபால் வைத்த சென்னி படர் ஒளி ஆனவன்\nதாள் வைத்த ஆறு தரிப்பித்த ஆறே
எமது தலையின் மேல் தமது திருவடியை இறைவன் வைத்து அருளிய முறையை செய்யாமல் இருந்திருந்தால் யான் மேலும் மேலும் சேர்ந்து கொள்ளும் வினைகளால் மாயனாகிய திருமால் மாயையால் வைத்த எண்ணங்களையே கொண்டு மாயத்திலேயே எமது வாழ்க்கை இருக்கும் படி ஆக்கிவிடும். எமது தலையில் அமிழ்தமாக இருக்கின்றவனும் எங்கும் படர்கின்ற ஒளி வடிவமாக இருப்பவனும் ஆகிய இறைவன் தமது திருவடியை எமது தலையின் மேல் வைத்து அருளிய வழிமுறையும் முக்திக்கான அனைத்து நலங்களையும் எமக்கு அருளிய வழிமுறையுமே எம்மை அப்படிப்பட்ட மாய வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியது.
திரு அடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்\nதிரு அடி ஞானம் சிவ லோகம் சேர்க்கும்\nதிரு அடி ஞானம் சிறை மலம் நீக்கும்\nதிரு அடி ஞானம் திண் சித்தி முத்தியே
இறைவனின் போற்றத்தக்க திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால் யாம் உணர்ந்த ஞானமே சிவமாகவே ஆக்கி விடும். அதுவே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு எம்மை கொண்டு சேர்க்கும். அதுவே எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்க காரணமாகிய மலங்களை நீக்கி விடும். அந்த ஞானத்தால் முக்தியும் எமக்கு உறுதியாக கிடைத்து விடும்.
திரு அடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி\nபெரு அடி வைத்த அந்த பேர் நந்தி தன்னை\nகுரு வடிவில் கண்ட கோனை எம் கோவை\nகரு வடிவு ஆற்றிட கண்டு கொண்டேனே
போற்றத்தக்க தமது திருவடிகளை எமது தலையின் மேல் வைத்து, தமது கனிவு கொண்ட அருள் பார்வையால் பார்த்து, அனைத்திலும் பெரியதான தமது திருவடியை எம்மேல் வைத்த அந்த பெருமைக்குரிய குருநாதராகிய இறைவனை, குருவின் வடிவத்தில் யாம் தரிசித்த தலைவனாகிய எமது இறைவன், இனி எப்போதும் கருவாக வந்து பிறக்கும் வழி இல்லாமல் போகும் படி செய்து அருளியதை யாம் கொண்டு கொண்டோமே.
இதையத்து நாட்டத்தும் எந்தன் சிரத்தும்\nபதிவித்த அந்த பரா பரன் நந்தி\nகதி வைத்த ஆறும் மெய் காட்டிய ஆறும்\nவிதி வைத்த ஆறும் விளம்ப ஒண்ணாதே
எமது இதயத்தில் இருக்கின்ற விருப்பத்திலும் எமது தலையின் மேலும் தனது திருவடியை நீங்காமல் வைத்து அருளிய அந்த அசையா சக்தியாகிய பரம்பொருளாகவும் குருநாதராகவும் இருக்கின்ற இறைவன், யாம் முக்தி அடைவதற்காக வைத்து அருளிய வழியையும், உண்மைப் பொருளை எமக்கு காட்டி அருளிய வழியையும், இயல்பான வாழ்க்கையின் இறப்பு விதியை மாற்றி தம்மை வந்து அடைவதையே விதியாக வைத்து அருளிய வழியையும், எம்மால் வார்த்தைகளால் விவரித்து சொல்ல இயலாது.
பேச்சு அற்ற இன்பத்து பேரானந்தத்திலே\nமாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கும் ஆள்வித்து\nகாச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கை கொண்டு\nவாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே
குருநாதராக வந்த இறைவன் பேச்சே இல்லாத இன்பத்தில் பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்து மாசு மலங்கள் எதுவும் இல்லாத என்னை சிவமாகவே ஆகும் படி செய்து என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளி வெப்பம் இல்லாத தூய ஜோதி உருவத்தில் எம்மிடம் இருந்த மாயை அசுத்த மாயை சுத்த மாயை ஆகிய மூன்றையும் தம் வசமாகக் கை கொண்டு இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற புகழ்ச்சிகளில் நான் மயங்கி விடாமல் அந்த புகழ்ச்சிகள் அழிந்து போகும் படி தனது திருவடிகளை தந்து அருளி என்னை எப்போதும் நிலைபெற்று வாழும் படி செய்து விட்டார்.
குரவன் உயிர் முச் சொரூபமும் கை கொண்டு\nஅரிய பொருள் முத்திரை ஆகக் கொண்டு\nபெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று\nஉருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே
இறைவனே குருவாக வந்து எனது உயிரின் மூன்று விதமான சொரூபங்களாகிய உருவம் அருவுருவம் அருவம் ஆகிய மூன்றையும் தம் வசமாக கை கொண்டு அரியதான பொருளாகிய எனது ஆன்மாவையே தமது முத்திரையாக எடுத்துக் கொண்டு அனைத்திலும் பெரியவனும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை எனக்குள் வைத்து குருநாதராகிய இறைவன் தனது அருளால் எனது பேச்சு முழுவதம் இல்லாமல் போகும் படி செய்து அவரின் அன்பில் உருகி விடும் படி செய்து தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான பக்குவத்தை அடையும் படி என்னை ஆட் கொண்டு அருளினான்.
உரை அற்று உணர்வு அற்று உயிர் பரம் அற்று\nதிரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்வு\nகரை அற்ற சத்து ஆதி நான்கும் கடந்த\nசொரூபத்து இருத்தி நல் சொல் இறந்தோமே
இறைவனே குருவாக வந்து தமது திருவடியை எனது உள்ளத்திற்குள் வைத்த பிறகு பேச்சும் இல்லாமல், உணர்வும் இல்லாமல், உயிரும் பரம்பொருளும் வேறு வேறு எனும் நிலையும் இல்லாமல், நுரையம் அலையும் இல்லாத தெளிவான நீரை போல எனது மனமானது தெளிவு பெற்று சிவமாகவே உறுதியாக ஆகி, வரம்புகள் இல்லாத உலக இயக்கத்திற்கு காரணமாகிய சக்திகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற பஞ்ச பூதங்களில் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகிய நான்கையும் கடந்து ஆகாயத்தில் இருக்கின்ற இறை சொரூபத்தை எனக்குள் இருத்தி, நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான சொற்களுமே இறந்து போய்விட அசைவற்ற சமாதி நிலையில் இருந்தேன் யான்.
தான் அவன் ஆதி சொரூபத்து உள் வந்து இட்டு\nஆன சொரூபங்கள் நான்கும் அகன்று அற\nஏனைய முத்திரை ஈறு ஆண்டனன் நந்தி\nதான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே
அடியவருக்கு இறைவன் தமது ஆதியில் இருக்கின்ற சுய ரூபமாகிய ஜோதியை அவரின் உள்ளத்திற்குள் வந்து வைத்து அருளுகின்றார். அப்போது இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின் பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில் அன்னம் பிராணன் மனம் விஞ்ஞானம் ஆகிய நான்கும் விலகிச் சென்று நீங்கி விட மீதி இருக்கின்ற ஆனந்த மய கோசத்தையே முத்திரையாக (ரூபம்) வைத்து அதையே தமக்கு எல்லையாக கொண்டு ஆண்டு அருளுகின்றான் குருவாக இருக்கின்ற இறைவன். அந்த குருநாதனாகிய இறைவன் தமது திருவடியை அடியவரின் தலை மேல் முன்னரே கிரீடமாக சூட்டி அடியவருக்குள் உறுதியாக ஸ்தாபித்தது பேருண்மையே ஆகும்.
தாள் தந்த போதே தனை தந்தது எம் இறை\nவாள் தந்து ஞான வலியையும் தந்து இட்டு\nவீடு அந்தம் அன்றியே ஆள்க என விட்டு அருள்\nஆவின் முடி வைத்து பார் வேந்தும் தந்ததே
குருவாக வந்து தமது திருவடியை அடியவரின் உள்ளத்திற்குள் தந்த அந்த கணமே தன்னையும் தந்து அருளுகின்றார் எமது இறைவன். அதனோடு அடியவருக்கு ஞானமாகிய வாளையும் தந்து அந்த ஞானத்தை உபயோகிக்கும் பக்குவத்தையும் கொடுத்து வைத்து, அடியவருக்கு முக்தியாகிய எல்லையும் இல்லாமல் அவரின் உடலுக்கு அழிவும் இல்லாமல் இந்த உலகத்தையே ஆட்சி செய் என்று விட்டு, தமது அருளை அடியவரின் உயிருக்கு கிரீடமாக வைத்து அருளி, இந்த உலகத்தையே ஆளுகின்ற அரச பதவியையும் தந்து அருளுகின்றார்.
இசைந்து எழும் அன்பில் எழுந்த படியில்\nபசைந்து இடும் ஈசனார் பாசத்து உள் ஏக\nசிவந்த குரு வந்து சென்னி கை வைக்க\nஉவந்த குரு பதம் உள்ளத்து வந்தே
இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில் எழுகின்ற உண்மையான அன்பில் இறைவன் எழுந்து அருளியதால், அடியவரோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற இறைவனார் அடியவரின் பாசத் தளைகளை அவருக்குள்ளிருந்து விலகும் போகும் படி செய்து, அருள் வடிவமான பரம்பொருளே குருவாக வந்து அடியவரின் தலையின் மேல் தமது திருக்கைகளை வைத்து அருளுவார். அப்போது அந்த அருளால் மகிழ்ந்து இருக்கும் அடியவரின் உள்ளத்திற்குள் குருவாக வந்திருக்கும் இறைவனின் திருவடிகளானது வந்து வீற்றிருக்கும்.
தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்\nஇருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்\nபிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம்\nகரி கொன்ற ஈசனை கண்டு கொண்டேனே
வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற பல விதமான உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாகிய இறைவன் அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற தன்மையை சிறிது அளவும் உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள். இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற இந்த உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை எல்லாம் அறுத்து விட்டு தான் எனும் அகங்காரத்தை கொன்று தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும் யான் கண்டு கொண்டேனே.
அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும்\nசெறிந்து உணர்ந்து ஓதி திரு அருள் பெற்றேன்\nமறந்து ஒழிந்தேன் மதி மானிடர் வாழ்க்கை\nபிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே
இந்த பரந்து விரிந்து இருக்கின்ற உலகம் முழுவதும் உள்ள பொருள்களை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டேன். அந்த அனைத்து பொருளுக்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை உணர்ந்து கொண்டு அந்த இறைவனை ஓதி திரு அருளையும் பெற்றுக் கொண்டேன். பிற மனிதர்களின் வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற தன்மையை மறந்து ஒழித்து விட்டேன். அவர்களை விட்டு பிரிந்து உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டு இந்த பிறவியையும் நீங்கி விட்டேன்.
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி\nசிவம் ஆன ஞானம் தெளியவும் முத்தி\nசிவம் ஆன ஞானம் சிவ பரத்து ஏகும்\nசிவம் ஆன ஞானம் சிவ ஆனந்தம் நல்குமே
சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானத்தினால் அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார். அப்படி அவரது மனம் தெளியும் போதே அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார். அப்போது சிவத்தின் பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில் தாமும் சென்று அடைகின்ற நிலையையும் அடியவர் பெற்று விடுவார். அதன் பிறகு சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானமே சிவத்தின் பேரானந்த நிலையையும் அடியவருக்கு கொடுக்கும்.
பின் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை\nமுன் எய்த வைத்த முதல்வனே எம் இறை\nதன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்\nமன் எய்த வைத்த மனம் அது தானே
அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில் அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி கொடுத்து அருளுவதும் இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே அந்த நிலையை அடையும் படி வைத்து அருளியதும் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற எமது இறைவனே ஆகும். அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும் அடையும் காலத்தில் இறைவன் தாமே அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு இருக்கின்ற உறுதியான மன வலிமையை அடையும் படி செய்து அருளுகின்றார்.
பத்தியும் ஞான வயிராக்கமும் பர\nசித்திக்கு வித்து ஆம் சிவ அகம் சேர்தல் ஆல்\nமுத்தியில் ஞானம் முளைத்தல் ஆல் அம் முளை\nசத்தி அருள் தரில் தான் எளிது ஆமே
இறைவனிடம் மிகுந்த பக்தியும் அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில் மிகவும் உறுதியாக நிற்பதும் பரம் பொருளை அடைவதற்கு விதையாக இருக்கின்றது. இந்த விதையானது தமக்குள் இருக்கின்ற சிவமே தாம் என்பதை உணர்ந்து அந்த இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து இருப்பதால் தான் கிடைக்கின்றது. இந்த நிலையில் இருக்கும் போது கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலையில் உண்மை அறிவான ஞானத்தை இந்த விதையே தமக்குள் முளைக்க வைக்கின்றது. ஆனால் இந்த ஞானத்தை முளைக்க வைப்பதற்கு தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது தனது அருளை கொடுத்தால் தான் எளிமையாக நடக்கும். இல்லாவிட்டால் கடினமே.
திரு ஆகி சித்தியும் முத்தியும் சீர்மை\nஅருளாது அருளும் மயக்கம் அறு வாய்மை\nபொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்\nஉரு அருளா விடில் ஒர ஒண்ணாதே
அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக வீற்றிருந்து அனைத்து சித்திகளையும் கொடுப்பதும் முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும் உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும் வெளிப்புறத்திலிருந்த அருளாமல் குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி மாயையாகிய மயக்கத்தை அறுப்பதும் உண்மை பொருளாகிய வேதத்தின் எல்லையாகிய ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும் இறைவனே சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து அருளாமல் போனால், அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது.
தான் நந்தி நீர்மை உள் சந்தித்த சீர் வைத்த\nகோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை\nவான் நந்தி என்றும் கீழும் ஒருவர்க்கு\nதான் நந்தி அங்கி தனி சுடர் ஆமே
அடியவர் தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் மழை போன்ற அளவில்லாத தன்மையில் அடியவரின் பாத்திரம் போன்ற பக்குவத்துக்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு தமக்குள் சந்தித்த இறைவன் தனது அருளால் சிறப்பாக வைத்து அருளிய ஞானத்தின் மூலம் வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் குருவாகவும் இருக்கின்ற இறைவனாகிய எமது தந்தையே எனும் உண்மையை அறிந்து கொள்ளுகின்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மழை போல குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளும் இறைவனே என்றும் இந்த உலகத்திலும் இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்துக்கு ஏற்ற பாத்திரமாகி தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும் தனக்கு சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப் பெரும் சுடர் ஒளியாகவும் இருக்கின்றார்.
சித்தம் யாவையும் சிந்தித்து இருந்தாரும்\nஅத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே\nசித்தம் யாவையும் திண் சிவம் ஆண்ட கால்\nஅத்தனும் அவ் இடத்தே அமர்ந்தானே
தங்களின் எண்ணத்தில் முழுவதும் இறைவனையே வைத்து அவனையே சிந்தித்து இருக்கின்ற அடியவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது எதனால் என்றால் அவனது திருவருளாலே ஆகும். அப்போது அடியவரின் எண்ணங்கள் முழுமையும் உறுதியாக பற்றிக் கொண்டு சிவப் பரம்பொருளே ஆட்கொள்ளும் காலத்தில் தந்தையாக இருந்து வழி காட்டுகின்ற இறைவனும் அடியவரின் எண்ணங்கள் இருக்கின்ற சித்தத்திலேயே குருவாக வந்து வீற்றிருப்பான்.
குருவே சிவம் என்ன கூறினன் நந்தி\nகுருவே சிவம் என்பது குறித்து ஓரார்\nகுருவே சிவம் ஆக கோனும் ஆய் நிற்கும்\nகுருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே
தமக்கு குருவாக அமைந்தவரே சிவப் பரம்பொருள் என்று கூறியருளினார் குருநாதராகிய இறைவன். ஆயினும் குருவாக இருப்பது சிவப் பரம்பொருளே என்பதை தமக்குள் சிந்தித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறு ஆராய்ந்து அறிந்து கொண்டால், தமது குருவே அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருளாகவும், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் நிற்கின்றதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு, தமது குரு என்பவர் சொற்களால் விவரிக்க முடியாதவராகவும், ஐம் புல உணர்வினால் முழுமையாக உணர முடியாதவராகவும் இருக்கின்ற ஒரு இறைவனாக இருப்பார்.
சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த\nசிவனே என அடி சேர வல்லார்க்கு\nநவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும்\nபவம் ஆனது இன்றி பர லோகம் ஆமே
சிவப் பரம்பொருளே சிவத்தை அறிந்த ஞானியாகவும் இருப்பதால், சிவத்தை அறிந்த உண்மை ஞானியாகிய குருவையே சிவப் பரம்பொருள் என்று குருவின் திருவடியை சரணடைய முடிந்தவர்களுக்கு, அவர்களுக்குள் தோன்றுகின்ற புதுமையான அற்புதமான ஞானத்தின் மூலம் நன்மையைத் தரும் முக்தியை அடைந்து இந்த உலக வாழ்கை என்பது இனி எப்போதும் இல்லாத நிலையில் இறைவன் இருக்கின்ற உலகத்தை அடைவார்கள்.
உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பால்\nதிண்மையும் ஒண்மை சிவம் ஆய நல் அரன்\nவண்மையும் எட்டு எட்டு சித்த மயக்க வந்த\nஅண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே
அடியவர்கள் உலகத்தில் பார்க்கின்ற அனைத்தும் உண்மை என்று நினைக்கின்ற மாயையை நீக்கி பொய்யான உலக அறிவினை அழிப்பதையும், பரம்பொருளாகிய உண்மையின் மேல் மன உறுதியுடன் சிவத்தோடு ஒன்றி இருக்க வைப்பதையும், தீமையை நெருங்க விடாமல் தடுக்கும் நல்ல பாதுகாப்பு அரனாக வலிமையுடன் நிற்பதையும், ஆகிய இவை அனைத்தையும் உலக அறிவாகிய அறுபத்து நான்கு கலைகளால் சித்தம் மயங்கி வந்தவர்களால் அறிந்து கொள்ள முடியுமா? தலைவனாகிய இறைவனின் திருவருள் இல்லாமல் இவற்றை யாரால் அறிந்து கொள்ள முடியும்? ஆகவே சிவ குருவாக வந்த இறைவனின் திருவருளாலேயே அனைத்தையும் அடியவர்களால் அறிந்து கொள்ள முடியும்.
சுத்த சிவன் குருவாய் வந்தது உய்மை செய்து\nஅத்தனை நல் அருள் காணா அதி மூடர்\nபொய்ய தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்\nஅத்தன் இவன் என்று அடி பணிவாரே
பரிசுத்தமான சிவப் பரம்பொருளே குருவாக வந்தது அனைத்து உயிர்களும் மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்கின்ற மாபெரும் கருணை செய்து அனைவருக்கும் தந்தையாக இருந்து நன்மையான அருளை வழங்குதற்காகவே ஆகும். இதை கண்டு உணராத மிகவும் குருடர்களான மூடர்களே தங்களின் பொய்யான எண்ணங்களுக்கு தகுந்தது போல மூன்றாவது கண்ணைக் கொண்டு எரித்து அழிக்கும் இவன் எமனே என்று அறிவின்மையால் கூறுவார்கள். ஆனால் இதை கண்டு உணர்ந்த புண்ணியர்களாகிய அடியவர்களோ அனைவருக்கும் தந்தையாக இருப்பவன் இவனே என்று குருவாக வந்த இறைவனின் திருவடிகளை தொழுது வணங்குவார்கள்.
தேவனும் சித்த குருவும் உபாயத்து உள்\nஆவையின் மூன்றாயின கண்டு உரையவே\nமூவா பசு பாச மாற்றிய முத்திப்பால்\nஆவையும் நல்கும் குரு பரன் அன்பு உற்றே
அடியவர்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும், அடியவரின் சித்தத்தை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு குருவாகவும் அவரே வழிகாட்டி உள்ளே இருந்து அடியவர்களின் ஆன்மாவானது மூன்றாக இருப்பதை மாயை நீங்கி கண்டு கொள்ளும் படி அருளி அதை புரிந்து கொள்ளும் படி உபதேசித்து மூன்றாக இருக்கின்ற பதி பசு பாச தத்துவத்தில் பசுவாகிய ஆன்மாவையும், பாசமாகிய தளையையும் மாற்றி அமைத்து ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியை கொடுப்பதால் ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதை கொடுத்து அருளும் குருவாக பரம்பொருளே இருப்பது அடியவர்களின் மீது கொண்ட அன்பினால் ஆகும்.
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப் பால் ஆய்\nநல்லார் உளத்து மிக்கு அருள் நல்கல் ஆல்\nஎல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தல் ஆல்\nசொல் ஆர்ந்த நல் குரு சுத்த சிவமே
அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன் இந்த உலகத்தின் பக்கத்திலும் இருக்கின்றான். அவன் அன்பு கொண்ட நல்லவர்களின் உள்ளத்தில் இருந்து மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில் அருளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். இந்த அருளால் இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும் மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவனது திருவருளை வழங்குகின்றான். ஆதலால் சொல்லை முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும் நன்மையே வடிவான குருவாக இருப்பது பரிசுத்தமான சிவப் பரம் பொருளே ஆகும்.
சித்திகள் எட்டோடும் திண் சிவம் ஆக்கிய\nசுத்தியும் எண் முத்தி துய்மையும் யோகத்து\nசத்தியும் மந்திரம் சாதகம் போதமும்\nபத்தியும் நாதன் அருளில் பயிலுமே
மாபெரும் சித்திகளாகிய அட்டமா சித்திகளோடு உறுதியான சிவப் பரம் பொருளாகவே அடியவரையும் ஆக்குவதற்கு பல விதமான சோதனைகளை செய்து பெற்ற பக்குவமும், பல விதமான எண்ணங்களில் இருந்து விடுதலை அடைந்து மோன நிலையில் எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமும், அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும், அதனால் தான் நினைப்பதும் சொல்லுவதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும், மந்திரம் போன்ற சொற்களும், செய்கின்ற அனைத்து செயல்களும் சாதகமாகவும், முக்காலமும் அறிந்த ஞானமும், உண்மையான சரணாகதியாகிய பக்தியும், ஆகிய இவை அனைத்தும் தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய இறைவனின் திருவருளால் அடியவர்கள் கற்றுக் கொள்ளலாம்.
பாசத்தை கூட்டியே கட்டி பறித்து இட்டு\nநேசத்த காயம் விடுவித்து நேர் நேரே\nகூசு அற்ற முத்தியில் கூட்டல் ஆல் நாட்டு அகத்து\nஆசு அற்ற சற் குரு அப் பரம் ஆமே
அடியவர் உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பல விதமான பந்த பாசங்களை ஒன்றாக கூட்டி அதை ஒரு கட்டாக கட்டி வைத்து அதை அடியவரிடமிருந்து பறித்து நீக்கி வெளியில் எறிந்து விட்டு இது வரை என்னுடையது என்று அடியவர் தனது உடலின் மீது கொண்டிருந்த ஆசையை விடுவித்து இறைவனுக்கு நேரானதாகவும் சரிசமமாகவும் இருக்கின்ற ஒரு பழியும் இல்லாத முக்தியில் சேர்த்து அருளியதால் இந்த உலகத்தில் இருக்கும் போதே ஒரு குற்றமும் இல்லாத உண்மையான குருவாக அந்த பரம்பொருளே வந்து வழிகாட்டி அருளுகின்றான்.
பத்தி பணிந்து பரவும் படி நல்கி\nசுத்த உரையால் துரிசு அற சோதித்து\nசத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால்\nசித்தம் இறையே சிவ குரு ஆமே
பக்தியையும் இறைவனை வணங்கி பணிவதையும் செய்கின்ற அடியவரின் புகழை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் படி கொடுத்து அருளி, தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் நிகழும் சத்திய வாக்கையும் கொடுத்து அருளி, ஒரு குற்றமும் இல்லாமல் போகும் படி பல விதமான சோதனைகளால் சோதித்து, நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் தாமே என்பதை காட்டி அருளியதால் அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும் இறை சக்தியே அருளைக் கொடுக்கின்ற குருவாக வந்து இருக்கின்றான்.
அறிய ஒண்ணாத உடம்பின் பயனை\nஅறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி\nஅறிய ஒண்ணாத அறு வகை கோசத்து\nஅறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதித்தே
அறிந்து கொள்ள முடியாத உடம்பின் உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று அந்த முறையின் மூலம் கிடைக்கின்ற தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று, ஒரு அண்டத்தையே தமது உடம்பிற்குள் பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்.
ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்\nஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி\nஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ\nஆய்ந்து அறிந்தேன் மனம் மய அம்மை கண்டேனே
இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்களே அமரர்களாகவும் உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற ஞானிகளாகவும் இருக்கின்றார்கள். ஆனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழி முறை அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும். அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனின் திருவடிகளை எமது இரண்டு கைகளையும் கூப்பி தொழுது வணங்கி எமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொண்டோம். அது எப்படி என்றால் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே எமக்குள் இருக்கின்ற மனமாகவும் அதன் தன்மைகளாகவும் எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் இருந்து எமக்கு காண்பித்தை யாம் கண்டு கொண்டோம்.
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்\nஓத கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்\nபேதிப்பு இலாமையில் நின்ற பராசத்தி\nஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே
ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவனே ஏழு உலகங்களையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான். அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற கடல்களும் அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும் ஆகிய அனைத்துமாக அவனே நிற்கின்றான். அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு இல்லாதவனாக ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான். ஆதியிலிருந்தே அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற தெய்வமாகவும் அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும் அவனே இருக்கின்றான்.
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்\nஆமே பிரானுக்கு அதோ முகம் ஆனதாம்\nஆமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்\nநாமே பிரானுக்கு நரர் இயல்பு ஆமே
அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனுக்கு ஐந்து திரு முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகமாக அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களுமே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருக்கின்ற உயிர்களால் அழைக்கப் படுகின்ற பலவாறான பெயர்களே இறைவன் தனது திருக்கழுத்தில் அணிந்து இருக்கின்ற மண்டையோட்டு மாலையாக இருக்கின்றது. இவையெல்லாம் மாயையை தமது இயல்பாக கொண்ட மனிதர்களால் பாவனை செய்யப் பட்ட உருவகங்களே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.
இத் தவம் அத் தவம் என்று இரு பேர் இடும்\nபித்தரை காண் இலன் ஆம் எங்கள் பேர் நந்தி\nஎத் தவம் ஆகில் என் எங்கும் பிறக்கில் என்\nஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகல் ஆமே
இந்த தவம் சிறந்தது அந்த தவம் சிறப்பு இல்லாதது என்று நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்ற பைத்தியக்காரர்களை எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் கண்டு கொள்வது இல்லை. எந்த தவத்தை கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில் எந்த உயிராக பிறந்திருந்தால் என்ன? அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு உடனடியாக முக்திக்குள் நுழைய முடியும்.
சைவ சமைய தனி நாயகன் நந்தி\nஉய்ய வகுத்தது ஒரு நெறி ஒன்று உண்டு\nதெய்வ அரன் நெறி சன்மார்க்கம் சேர்ந்தது\nவையத்து உள்ளவர்க்கு வகுத்து வைத்தானே
சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழி முறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான இறைவனை அடைவதற்கான வழி முறையாகும். உண்மை வழி முறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு பல வழி முறைகளாக பிரித்து வைத்து அருளினான் இறைவன்.
ஆய்ந்து உணர்வார்கள் ஆன சாத்திரம் பல\nஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி\nஆய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழுது\nஏய்ந்து உணர செய்வது ஓர் இன்பமும் ஆமே
இறைவனை அடைய தாங்கள் கடைபிடிக்கும் ஒரு வழி முறையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள் அதற்கான விதி முறைகளை பல விதமாக கூறுகின்றார்கள். ஆனால் இந்த விதி முறைகளை ஆராய்ந்து உணர முடியாத வகையில் தான் நிற்கின்றது இறைவனை அடைவதற்கான உண்மையான வழி முறை. அதனை தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் இறைவனின் திருவடிகளை இரண்டு கைகளும் கூப்பி தொழுது வணங்கி தம்முடைய தூய்மையான அன்பினால் இறைவனை உணர்ந்து கொள்ளுவதே ஒரு பேரின்பம் ஆகும்.
மினல் குறி ஆளனை வேதியர் வேதத்தின்\nஅக் குறி ஆளனை ஆதி பிரானை\nநினை குறி ஆளனை ஞான கொழுந்தின்\nநய குறி காணில் அரன் நெறி ஆகுமே
மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த வடிவமாக இருப்பவனை அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்தின் உட்பொருள் வடிவமாக இருப்பவனை ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனை அடியவர்கள் நினைக்கின்ற வடிவமாகவே வந்திருந்து அருளுபவனை ஞானத்தின் உச்சியான நிலையில் அன்பின் வடிவமாகவே கண்டு தரிசித்தால் அதுவே அவனை அடைவதற்கான வழி முறையாக ஆகி விடும்.
ஈரு மனத்தை இரண்டு அற வீசுமின்\nஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியை\nவாரும் அரன் நெறி மன்னிய முன்னியத்து\nஊரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே
பொருளும் போகமும் வேண்டும் அருளும் ஞானமும் வேண்டும் என்று இரண்டு விதமாக அலைகின்ற மனதை அந்த இரண்டு ஆசைகளும் இல்லாமல் போகும் படி வெளியே எடுத்து வீசிவிடுங்கள். அப்போது கிடைக்கின்ற பேரமைதியான நிலையில் சாதகருக்குள் சக்தியின் ஒலி வடிவமாகிய ஒரு மந்திர எழுத்து தோன்றும். அப்படி தானாகவே தோன்றுகின்ற மந்திர எழுத்தை அசபையாக ஓதிக் கொண்டே இருங்கள். அவ்வாறு ஓதிக் கொண்டு இருப்பவரை அணைத்துக் காப்பாற்றுகின்ற வழி முறையில் மனதை நிலை பெற வைத்திருந்தால், தமக்குள்ளே உருவாகும் சுடரானது பேரொளியாக தோன்றுவதை நீங்கள் உணரலாம்.
தேர்ந்தவர் தன்னை அடைந்த சிவ நெறி\nபேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெரு வழி\nஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள் நெறி\nபோந்து பிணைந்து புணர் நெறி ஆமே
இறைவனை தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் அடைந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை அவர்கள் அடைந்த படியே வெளிப்புறமாக தேடுவதை விட்டு விட்டு, மனதை ஒருநிலைப் படுத்தி தமக்குள் இறைவனையே நினைத்துக் கொண்டு, ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விட்டு, அடைகின்ற மிகப் பெரும் வழி முறைகளை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டவர்கள், அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும் புகுந்து இருக்கின்ற இறையருளை அடைவதற்கான வழி முறைகள் தமக்குள்ளே இருப்பதை உணர்ந்து, அதற்குள் புகுந்து அதனோடு பின்னிப் பிணைந்து ஒன்றாக கலந்து இறைவனை அடைகின்ற வழி முறை இதுவே ஆகும்.
அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும்\nசிவ நெறி தேடி திரிந்த அந் நாளும்\nஉரை நெறி உள்ள கடல் கடந்து ஏறும்\nதர நெறி ஆய தனி சுடர் தானே
அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான வழி முறைகளாக இருப்பவற்றை அறிந்து கொண்டேன் யானும். அந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை தேடி யான் திரிந்து கொண்டிருந்த முன்னொரு நாட்களில் எமக்குள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருக்கின்ற வழி முறைகளில் எமது உள்ளமாகிய பெரும் கடலை கடந்து மேல் நிலைக்கு செல்லுவதற்கு இறைவன் எமக்குத் தந்து அருளிய வழி முறைகளாக இருந்து வழி காட்டுவது தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத பேரொளிச் சுடராக எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்து கொண்டேன்.
ஆம் ஆறு உரைக்கும் அறு சமைய ஆதிக்கு\nபோம் ஆறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு\nஆம் ஆர் வழி ஆக்கும் அவ் வேறு உயிர்கட்கும்\nபோம் ஆறு அவ் ஆதார பூங் கொடியாளே
அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே இறைவனை அடைவதற்கான வழியை எடுத்துக் கூறுகின்ற ஆறு விதமான சமயங்களுக்கும் ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம் போய் சேருகின்ற வழி புண்ணியத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே புண்ணியத்தினால் இறைவனை அடைகின்ற வழியை உருவாக்கிக் கொடுத்து அதனால் பல வகையான உயிர்களுக்கும் இறைவனிடம் போய் சேருகின்ற வழியாக அவர்களுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களின் பூவிதழ்களை இணைக்கின்ற கொடியாக இருந்து ஏழாவது சக்கரமாக இருக்கின்ற இறைவனிடம் இணைப்பது இறைவியே ஆகும்.
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்\nபவன் அவன் வைத்த பழ வழி நாடி\nஇவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு\nஅவன் அவன் அங்கு உளனாம் கடன் ஆமே
சிவப் பரம்பொருளாக இருக்கின்ற இறைவன் வைத்து அருளிய தெய்வத்தை அடைவதற்கான ஒரு நெறி முறையை கடைபிடித்து அந்த சிவப் பரம்பொருளே வைத்து அருளிய பழமையான வழியை தமக்குள்ளே தேடி அடைந்து அதன் மூலம் தமது ஆன்மாவாக இருப்பதும் அவனே என்பதை அறிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு, தாம் பார்க்கின்ற அனைத்திலும் அவனை காண்பவர்களுக்கு அவர்கள் பார்க்கின்ற அனைத்திலும் அதனதன் தன்மையிலேயே வந்து இருக்க வேண்டியது அந்த இறைவனின் கடமை ஆகும்.
சைவ பெருமை தனி நாயகன் தன்னை\nஉய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை\nமெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம் செய்\nவையத்து தலைவனை வந்து அடைந்து உய்மினே
சைவம் என்று அறியப்படுகின்ற இறைவனை அடைவதற்கான நெறிமுறைக்கு மிகப்பெரும் பெருமையாக இருக்கின்றவனும் தனக்கு சரிசமமாக வேறு யாரும் இல்லாத தலைவனாக இருக்கின்றவனும் உயிர்கள் அனைத்தும் தம்மை அடைவதற்காக அவற்றுக்குள் உணர்வாக கலந்து நின்று இயக்குகின்றவனும் அதற்கான ஞானத்தை தரும் ஜோதியாக இருந்து மாயையாகிய இருளை அகற்றுகின்ற குருநாதனாக இருக்கின்றவனும் தம்மை உண்மையாக அறிந்து கொண்ட பெருமை மிக்க அடியவர்களிடம் அன்பு செய்கின்ற அடியவனாக இருந்து பேரின்பத்தை கொடுக்கின்றவனும் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை நீங்களும் வந்து உங்களுக்குள் தேடி அடைந்து அவனை உண்மையாக உணர்ந்து மேன்மை பெறுங்கள்.
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள\nஎன்று அது போல இரு முச் சமையமும்\nநன்று இது தீது இது என்று உரை ஆளர்கள்\nகுன்று குரைத்து எழு நாயை ஒத்தாரே
ஒன்றாக இருக்கின்ற மிகப் பெரும் ஊருக்கு செல்லுவதற்கு ஆறு விதமான வழிகள் இருக்கின்றது. அது போலவே ஆறு விதமான சமயங்களும் ஒரே பரம்பொருளாகிய இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையே சொல்லுகின்றன. ஆனால் இதை முழுவதுமாக உணர்ந்து கொள்ளாமல் நன்மையானது இந்த சமயம் தீமையானது இந்த சமயம் என்று பிரித்து பிரித்து வேறுபாடுள்ள கருத்துக்களை உரைத்து தாம் கூறுவதே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்க பிரச்சாரம் செய்கின்றவர்கள் மலையைப் பார்த்து குரைத்து குதிக்கின்ற நாயை போலவே இருக்கின்றார்கள்.
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்\nஅமைய வகுத்தவன் ஆதி புராணன்\nசமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட\nஅமைய அங்கு அழல் நின்ற ஆதி பிரானே
விண்ணுலக தேவர்கள் அனைவரையும் மண்ணுலக மனிதர்கள் அனைவரையும் ஆதி காலத்திலேயே அவரவர் வினைகளுக்கு ஏற்ப வகுத்து படைத்தவன் ஆதியாகவும் பழமையானவனாகவும் இருக்கின்ற இறைவன். அவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் தனது திருவடிக்கு இணையான முக்தியை தமக்குள்ளேயே தேடி அடைவதற்காக அவரவர் தகுதிகளுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்து அதை முறையாக கடைபிடிப்பவர்கள் பக்குவ நிலையை அடையும் போது அவர்களுக்குள் நெருப்பு வடிவமாக வந்து நிற்கின்றான் ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்.
ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே உதையம் உற்று\nஆங்காரம் அற்றும் அமைவது கை கூடார்\nசாங்காலம் உன்னார் பிறவாமை சார்வு உறார்\nநீங்கா சமையத்து நின்று ஒழிந்தார்களே
பிரணவ மந்திரமான ஓங்காரத்தின் சத்தத்திற்கு உள்ளே இருக்கின்ற ஒளி வடிவான இறைவனே சாதகருக்குள்ளும் ஜோதியாக வெளிப்படுவதை மனதை ஒரு முகப்படுத்தி உணர்வதன் மூலம் அகங்காரத்தை அழித்து இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை பெற்று அடைய முடியாதவர்கள் தாம் இறக்கும் காலம் ஒன்று வரும் என்பதை நினைக்காமல் இருக்கின்றார்கள். ஆதலால், இனி எப்போதும் பிறக்காமல் இருக்கின்ற பெரும் நிலையை சார்ந்து இருக்கின்ற வழி முறைகளில் செல்லாமல் எப்போதும் தாம் கடைபிடிக்கின்ற வழியே சிறந்தது என்று ஓயாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்ற சமயங்களின் கொள்கைகளின் வழியில் நின்று இறந்து அழிந்து போகின்றார்கள்.
மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன்\nஎன்னில் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள்\nதுன்னி மனமே தொழுமின் துணை இலி\nதன்னையும் அங்கே தலை படல் ஆமே
எப்போதும் நிலையாக இருக்கின்ற ஒருவனாகிய இறைவன் நினைக்கும் வடிவமாகவே கலந்து மனதின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கின்றான். இப்படி இறைவன் இருப்பதை எடுத்துக் கூறினால் அறியாமையில் மூழ்கி அறிவுக் குறைபாடினால் ஏழைகளாக இருக்கின்ற மனிதர்கள் இகழ்ந்து சிரிப்பார்கள். இவ்வாறு எண்ணத்திற்கு ஏற்றபடி தம்மோடு பொருந்தி இருக்கின்ற இறைவனை தமது மனதினால் தொழுது வந்தால் தனக்கு சரிசமமாக எதுவும் இல்லாதவனாகிய இறைவன் தங்களின் மனதிற்குள் வெளிப்பட்டு அவனை உணர்வதற்கான வழியில் செல்ல வைப்பான்.
அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி\nபறியுடன் பாரம் பழம் பதி சிந்தும்\nகுறி அது கண்டும் கொடு வினையாளர்\nசெறிய நினைக்கிலர் சேவடி தானே
இறைவனிடமிருந்தே தாம் வந்திருக்கின்றோம் என்பதை அறிந்தவர்களின் அறிவோடு கூடி அழைக்கின்ற பழமையான தலைவனாகிய இறைவன் ஒரு ஓடக்காரணும் படகுமாக வந்து உடலுடன் சேர்ந்து பாரமாக இருக்கின்ற பற்றுக்களையும் கர்மங்களையும் அழித்து பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவுகின்றான். இந்த வழி முறையை தெரிந்து கொண்டும் கொடுமையான வினைகளைக் கொண்டு இருப்பதால் அதை உணராமல் இருப்பவர்கள் பிறவியை கடப்பதற்காக இறைவனின் செம்மையான திருவடிகளை நினைக்காமல் இருக்கின்றார்கள்.
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலா\nபார் அறிவாளர் படு பயன் தான் உண்பர்\nகார் அறிவாளர் கலந்து பிறப்பர்கள்\nநீர் அறிவார் நெடு மா முகில் ஆமே
மும் மலங்களை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் தன்னுடன் துணையாகவே நிற்கின்ற இறைவனை பற்றிய நினைவே இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். உலக அறிவை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் அதற்குள்ளேயே விழுந்து கிடந்து அதன் பயன்களை தானே அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். மாயை எனும் இருளால் அறிந்து கொள்ளக் கூடியதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் வினைகளோடு கலந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள். இறைவன் எனும் மேகத்தில் இருந்து ஆன்மா எனும் நீராக தாம் வந்து இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு நீண்ட மாபெரும் மேகத்தை போல அருளை மழையாகப் பொழிபவனாக இறைவன் இருக்கின்றான்.
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்\nஅரும் தவம் மேல் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்\nவருந்தா வகை செய்து வானவர் கோனும்\nபெரும் தன்மை நல்கும் பிறப்பு இலி தானே
பிறவி எனும் துன்பத்தில் இருந்து அழுகின்றவர்களும், மனித இனத்திற்கான ஒழுக்கங்கள் கெட்டவர்களும், செய்வதற்கு அரியதான தவங்களை செய்வதையே குறிக்கோளாக மேற் கொண்டு அந்த தவங்களை செய்யும் போதும் தலைவனாகவும் அடியவனாகவும் இருக்கின்ற இறைவனை எண்ணிக் கொண்டே இருந்தால், அவர்களின் துன்பம் நீங்கி இனி எப்போதும் வருந்தாமல் இருப்பதற்கான வழி முறையை செய்து கொடுத்து வானவர்களின் அரசனாகியவன் மாபெரும் கருணையோடு அருளுவான் பிறப்பு இல்லாதவனாகிய இறைவன்.
பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி\nதாங்கும் மனிதர் தரணியில் நேர் ஒப்பர்\nநீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்\nஏங்கி உலகில் இருந்து அழுவாரே
அழகாக அமைக்கப் பட்ட கொன்றை மலர்கள் படர்ந்து இருக்கின்ற திருச் சடையைத் தரித்து இருக்கின்ற இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைக்கின்ற எண்ணங்களை தமது நெஞ்சத்தில் தாங்கி இருக்கின்ற மனிதர்கள் இந்த உலகத்திலேயே இறைவனின் திருவடிகளுக்கு இணையானவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இறைவன் வேறு தாம் வேறு என்று நினைத்துக் கொண்டு இறைவனை எப்பொழுதும் நினைக்காமல் இருப்பவர்கள் தாம் விரும்பிய எதுவும் கிடைக்காமல் ஏக்கத்திலேயே இந்த உலகத்தில் இருந்து எப்போது இந்த பிறவி முடியும் என்று துன்பப் படுவார்கள்.
இமையங்கள் ஆய் நின்ற தேவர்கள் ஆறு\nசமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓத\nஅமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானை\nகமை அறிந்தார் உள் கலந்து நின்றானே
இமயத்தை போல உயர்ந்த நிலையில் நிற்கின்ற தேவர்கள் இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளை இறைவனிடமிருந்து பெற்றனர். அவர்கள் பெற்ற வழி முறைகளின் படி சாஸ்திரங்களை ஓதுவதின் மூலமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொண்டோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அனைத்திற்கும் ஆதியாகவும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து அறிந்து கொண்டவர்களின் உள்ளுக்குள் ஒன்றாக கலந்து நிற்கின்றான் இறைவன்.
வழி சென்று மா தவம் வைகின்ற போது\nபழி செல்லும் வல் வினை பற்று அறுத்து ஆங்கே\nவழி செல்லும் வல் வினையார் திறம் விட்டிட்டு\nஉழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே
இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல் சென்று புரிகின்ற மாபெரும் தவமானது அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற போது, ஞானிகள் பழிக்கின்ற உலக வழிகளில் செல்லும் போது வலிமையான வினைகளினால் கட்டி இருக்கின்ற பற்றை அறுத்து விட்டு, தாம் இருக்கின்ற இடத்திலேயே இறைவனை நோக்கிய வழியில் செல்லுகின்றவர்கள், வலிமையான வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின் உறுதியான பந்த பாசங்களை விட்டு விட்டு, இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி அவனை அடைகின்ற வழியில் சென்றால், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவனின் முன்பு சென்று நிற்பார்கள்.
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்\nகழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்\nசுழி நடக்கும் துயரம் அது நீக்கி\nபழி நடப்பார்க்கு பரவலும் ஆமே
இறைவனை அடைகின்ற வழியில் நடக்கும் போது கிடைக்கின்ற பலன் ஒன்று இருக்கின்றது. இந்த உலகத்தில் தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில் செல்பவர்கள் மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பி கூறுகின்ற கற்பனையான விஷயங்களை நம்பி கேட்கிறார்கள். இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பி செல்லுவதால் பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதற்கு காரணமாக இருக்கின்ற வினைகளை நீக்குவதற்கு உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியை சுமத்தினாலும் அதனால் கவலை படாமல் இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும் அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும் கிடைக்கும்.
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி\nபெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை\nஅறும் ஆறு அது ஆனது அங்கி உள் ஆங்கே\nஇறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே
இறைவனை அடைகின்ற வழி முறையை அறிந்து கொள்வதும் அதன் மூலம் தமக்கு உள்ளே நிற்கின்ற ஜோதியாகிய இறைவனை பெறுகின்ற வழி முறையை அறிந்து கொண்டால் குழப்பமானது என்று ஒன்றும் இல்லாமல் போய்விடும். அப்போது இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் அறுக்கின்ற வழியாக அதுவே ஆகிவிடும். இதை கடை பிடித்து நன்மை செய்கின்ற ஜோதியாக உள்ளே இருக்கின்ற இறைவனை அடைந்து தான் எனும் அகங்காரத்தை நீக்குகின்ற வழி முறையை அறியாதவர்கள் மாயையில் சிக்கிக் கொண்டு இறைவனின் அருளைப் பெறாத ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.
அந் நெறி நாடி அமரர் முனிவரும்\nசெல் நெறி கண்டார் சிவன் என பெற்ற பின்\nமுன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்\nசெல் நெறி செல்லார் திகைக்கின்ற ஆறே
இறைவனை அடைகின்ற வழி முறையை தேடி அமரர்களும் முனிவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய வழி முறையை கண்டு கொண்டு அதிலேயே சிறிதும் மாறாமல் சென்று சிவம் என்கின்ற பரம் பொருளை பெற்று அடைந்தார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழி முறையை அறியாத மற்றவர்களோ தமக்கு பின்னாலும் முன்னாலும் இருக்கின்ற வழி முறைகள் என்று பலவாறாக தேடி அலைந்து எந்த வழியையும் நிலையாக கடை பிடிக்காததால் அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனின் திருவருளை இல்லாதவர்களாக அவர்கள் ஆகி விடுகிறார்கள். அமரர்களும் முனிவர்களும் சென்று அடைந்த வழி முறையில் செல்லாமல் எந்த வழியில் சென்று அடைவது என்று அறியாத மாயையில் திகைத்துக் கொண்டே அலைகின்றார்கள்.
ஆன சமையம் அது இது நன்று எனும்\nமாய மனிதர் மயக்கம் அது ஒழி\nகானம் கடந்த கடவுளை நாடுமின்\nஊனம் கடந்த உரு அது ஆமே
பலரால் சொல்லப்படுவதான சமயங்களில் அதுவும் இதுவும் நல்லது என்று பல விதமான சமயங்களைப் பற்றி மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கின்ற மனிதர்கள் தங்களை மயக்கி விட முயற்சி செய்வார்கள். அதில் சென்று மயங்குவதை ஒழித்து விட்டு நாதங்களை கடந்து நிற்கின்ற இறைவனை தேடுங்கள். அவ்வாறு தேடினால் அழிவை கடந்து நிற்கின்ற என்றும் அழியாத உருவமாகிய இறைவனை காணலாம்.
பரிசு அறி வானவர் பண்பன் பகலோன்\nபெரிசு அறி வானவர் பேரில் திகழும்\nதுரிசு அற நீ நினை தூய் மணி வண்ணன்\nஅரிது அவன் வைத்த அரன் நெறி தானே
கிடைப்பதற்கு மேலான பரிசு அவனே என்று அறிந்து கொண்ட தேவர்களுக்கு பெருங் கருணையோடு அருளுபவனும் பிரகாசமான சூரியனைப் போல் வெளிச்சத்தை கொடுத்து வழிகாட்டுபவனும் அடையக் கூடிய அனைத்தையும் விட பெரியதானவன் அவனே என்று அறிந்து கொண்ட தேவர்கள் அழைக்கின்ற பலவிதமான பெயர்களிலும் அப்படியே திகழ்பவனும் ஆகிய இறைவனை ஒரு குற்றமும் இல்லாமல் சாதகர்கள் நினைத்து வழிபட்டால் தூய்மையான மாணிக்கத்தில் நுழைகின்ற வெளிச்சம் அப்படியே எதிரொலிப்பது போல அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற தன்மையைக் கொடுத்து வழி காட்டி அருளுகின்றான். சாதகர்களை காத்து அருளுகின்ற இறைவனை அடைகின்ற வழி முறைகளே கிடைப்பதற்கு மிகவும் அரியதாக அவன் வகுத்து கொடுத்த அருளிய அந்த வழி முறைகள் ஆகும்.
அரன் நெறி அப்பனை ஆதி பிரானை\nஉர நெறி ஆகி வந்து உள்ளம் புகுந்தான்\nபரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்\nபரன் அறியா விடில் பல் வகை தூரமே
தங்களை காத்து அருளுகின்ற வழி முறையில் அப்பனாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனே தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து முயற்சி செய்ய வைக்கின்ற வழி முறைகளாகவே ஆகி வந்து தங்களின் உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருப்பான். பரம் பொருளை அடைகின்ற வழி முறைகளை தேடி அலைகின்ற பக்தர்கள் தங்களின் எண்ணத்தினால் அந்தப் பரம் பொருளை அறிந்து கொள்ளாமல் போய் விட்டால் இறைவனும் அவர்களால் நெருங்க முடியாத அளவிற்கு தூரமாகவே இருப்பான்.
மா தவர்க்கு எல்லாம் மா தேவர் பிரான் என்பர்\nநாதம் அது ஆகி அறியப்படும் நந்தி\nபேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்\nஆதியும் அந் நெறி ஆகி நின்றானே
மாபெரும் தவங்களை செய்தவர்கள் அனைவரும் மாபெரும் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று தமக்குள் உணர்ந்த இறைவனை கூறுவார்கள். அந்த இறைவனை சாதகர்கள் தமக்குள் நாத வடிவமாக ஆகி அறியப்படுகின்ற நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழி காட்டும் போது அவனை வேறு யாராகவும் பிரித்து எண்ணிப் பார்க்காமல் எமது தலைவன் இவனே என்று எண்ணிக் கொண்டு தம்மால் இயன்ற வழியில் அவனை அடைவதற்கு முயற்சி செய்தால் ஆதிப் பரம் பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும் தாங்கள் முயன்ற அந்த வழியாகவே ஆகி நிற்கின்றான்.
வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன\nகழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்\nசுழி அறிவாளன் தன் சொல் வழி முன் நின்று\nஅழிவு அறிவார் நெறி நாட கில்லாரே
இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் அறிந்து செல்பவர்களுக்கும் இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே பக்தி மார்க்கத்திலும் கர்ம மார்க்கத்திலும் செல்பவர்கள் ஆகிய இரண்டு வழியில் செல்பவர்களுக்கும் ஒரே மூல விதையாக அவர்களுக்குள் இருப்பதாகிய சுழுமுனை நாடி எனும் நடு நாடியின் மூலம் குண்டலினி சக்தியை ஏற்றி சென்று இந்த உலகத்தின் மேல் வாழ்வதும் கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் வீற்றிருக்கும் அனைத்தும் அறிந்தவனாகிய இறைவனே குருவாக இருந்து சொல்லி அருளுகின்ற வழியை முயற்சி செய்து விட்டுவிடாமல் கடைபிடித்து அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்து போவதை அறிந்து கொண்டவர்களின் வழி முறையை தேடி அடைவதற்கு முயற்சி செய்யாமலேயே ஆசைகளின் வழியே சென்று கொண்டு இருக்கின்றார்கள்.
சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி\nதூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு\nமாயன் மயக்கிய மானிடராம் அவர்\nகாயம் இளைக்கும் கருத்து அறியார்களே
நிலையான மனமில்லாதவர்களுக்கு தூரத்தில் இருந்து அருளுபவனும் நிலையான மனமுடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும் இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று இல்லாதவனும் பெயரில் நந்தி என்று அழைக்கப் படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும் தூய்மையானவனும் ஆகிய இறைவனை அசைவு இல்லாத மனதுடன் தமக்குள்ளேயே பார்க்க முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருக்கின்றான் இறைவன். அவ்வாறு பார்க்க முடியாமல் இருக்கின்ற மனிதர்களாகிய மற்றவர்கள் அனைவருக்கும் அவன் மாயனாகவே இருந்து மாயையில் மயக்கி வைத்திருப்பதால் அவர்கள் அனைவரும் தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற பற்றை குறைத்து உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்து கொள்ளுகின்ற முறையை அறியாமல் இருக்கின்றார்கள்.
மயங்கு கின்றாரும் அதை தெளிந்தாரும்\nமுயங்கி இரு வினை மூழை முகப்பு ஆய்\nஇயங்கி பெறுவாரேல் ஈறு அது காட்டி\nபயம் கெட்டு அவர்க்கு ஓர் பர நெறி ஆமே
மாயையிலேயே மயங்கி இருக்கின்றவர்களும், இறைவனை அடையும் வழி முறைகளை கடைபிடித்து அதனால் மாயை நீங்கி தெளிவு பெற்றவர்களும், தம்மால் இயன்ற வரை முயற்சி செய்து நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் அறுப்பதற்கு காரணமாக சுழு முனை நாடியின் துளைக்கு உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது மூச்சுக்காற்றை இயக்குவதன் மூலம் குண்டலினி சக்தியை கொண்டு சென்று சேர்த்து அமிழ்தத்தை பெற முடிந்தால் முக்தியை அதுவே காண்பித்து, இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான பயமும் அழிந்து போய் அவர்களுக்கு ஒரே பரம் பொருளுடன் சேருவதாகிய முக்திக்கு வழியாக அதுவே இருக்கும்.
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்\nசுத்த சிவன் எங்கும் தோய்வு உற்று நிற்கின்றான்\nகுத்தம் தெரியார் குணம் கொண்டு கோது ஆட்டார்\nபித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே
காரணமே தெரியாமல் கத்துகின்ற கழுதைகள் போலவே தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அதனால் எங்கும் இருக்கின்ற தூய்மையான சிவப் பரம்பொருள் அவர்களால் அறிய முடியாத படி தம்மை மாயையால் மறைத்துக் கொண்டு நிற்கின்றான். தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை அறிந்து கொள்ளாமல் நல்ல குணங்களை கடை பிடித்து தீய குணங்களை நீக்கிக் கொள்ளாதவர்கள் தீய குணத்திலேயே மூழ்கி அதனால் பித்து அதிகமாகி தினந்தோறும் வாழ் நாளை வீணடித்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்ற பிறவி சுழலிலேயே சிக்கிக் கொண்டு இருப்பார்கள்.
நூறு சமையம் உள ஆல் நுகரும் கால்\nஆறு சமையம் அவ் ஆறு உள் படுவன\nகூறு சமையங்கள் கொண்ட நெறி நில்லா\nநீறு பர நெறி இல்லா நெறி நின்றே
இறைவனை அடைவதற்காக என்று சொல்லப் படுகின்ற நூற்றுக் கணக்கான வழி முறைகள் இருக்கின்றன ஆதலால் அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைபிடிக்கும் போது இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளுக்கு உள்ளேயே அந்த நூற்றுக் கணக்கான வழி முறைகளும் அடங்கி விடும். இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் தாம் எடுத்துக் கொண்ட வழி முறையிலேயே நின்று விடாமல் ஒவ்வொரு வழி முறையிலும் பக்குவம் பெற்ற மிகவும் மேன்மையான நிலையாகிய பரம் பொருளை சென்று அடைகின்ற முக்திக்கான வழி முறை ஒன்று இருக்கின்றது. ஆனால் அதில் நின்று இறைவனை அடையாமல் வெறும் உலக ஆசைகளுக்காக செய்யப் படுகின்ற வழி முறைகளிலேயே நிற்கின்றார்கள்.
சிவ கதியே கெதி மற்று உள்ளது எல்லாம்\nபவ கதி பாச பிறவி ஒன்று உண்டு\nதவ கதி தன்னோடு நேர் ஒன்று தோன்றில்\nஅவ கதி மூவரும் அவ் வகை ஆமே
சிவப் பரம்பொருளை சரணடைவதே முக்திக்கான வழியாகும். சரணாகதியைத் தவிர வேறு விதமாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் உலக வாழ்க்கைக்கான வழியாக பாசத் தளைகளுடன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே இருக்கின்ற வழி முறைகளாகும். சரணாகதியாக தவம் செய்கின்ற வழி முறையை சாதகர்கள் முக்திக்கு நேரான ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு செய்யாமல் போனால் துன்பமான பிறவிகளுக்கே வழியாக இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் துன்பமான பிறவி எடுப்பதற்கான வழி முறைகளாகவே இருக்கும்.
அண்ணலை நாடிய ஆறு சமையமும்\nவிண்ணவர் ஆக மிகவும் விரும்பியே\nமுன் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்\nமண் நின்று ஒழியும் வகை அறியார்களே
அண்ணலாகிய இறைவனை தேடி அடைய உதவும் ஆறு விதமான வழி முறைகளும் முக்தி அடையவும் தேவர்களாக ஆக வேண்டும் என்று மிகவம் விரும்புகின்ற உயிர்களுக்கு வழி காட்டவே உருவாக்கப் பட்டுள்ளன. ஆனாலும் அந்த ஆறு வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொண்டு உணர்ந்து தெளிவடைவதற்கான முயற்சியை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் வெறும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் மற்றவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் அறிந்து கொண்டு அழியாமல் இருக்கின்ற முறையை அறிந்து கொள்ளாமலேயே இவர்கள் இருக்கின்றார்கள்.
சிவம் அல்லது இல்லை இறையோ சிவம் ஆம்\nதவம் அல்லது இல்லை தலை படுவோர்க்கு இங்கு\nஅவம் அல்லது இல்லை அறு சமையங்கள்\nதவ மல்ல நந்தி தாள் சார்ந்து உய்யீரே
சிவம் என்று அறியப்படுகின்ற பரம்பொருளைத் தவிர வேறு பரம்பொருள் எதுவும் இல்லை. இறை என்று அறியப்படுவது சிவப் பரம்பொருளே ஆகும். இந்த உலகத்தில் இறைவனை அடைய வேண்டும் என்று உறுதியாக செயல் படுபவர்களுக்கு தவம் என்கின்ற உயர்ந்த நிலையை தவிர வேறு உயர்ந்த நிலை எதுவும் இல்லை. ஆனால் ஆறு விதமான வழி முறைகளையும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு இந்த உலகத்தில் பயனில்லாததைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனால் தவத்திற்கு உறுதியாக நிற்கின்ற குருநாதனாகிய இறைவனின் திருவடியை சரணடைந்து மேன்மை நிலையை அடையாமல் இருக்கின்றீர்களே.
ஆறு சமையமும் கண்டு அவர் கண்டு இலர்\nஆறு சமைய பொருளும் பயன் இல்லை\nதேறுமின் தேறி தெளிமின் தெளிந்த பின்\nமாறுதல் இன்றி மனை புகல் ஆமே
இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் கண்டு அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள் அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து கொள்ள வில்லை. இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளும் சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அறிந்த பிறகு அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெளிவாக உணர்ந்த பிறகு எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் உறுதியாக வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை அடைவது கைகூடும்.
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு\nஉள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை\nஉள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு\nஉள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே
உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் என்று நம்புபவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் எமது உரிமையான இறைவன். உள்ளத்திற்கு உள்ளேயும் இல்லை வெளியேயும் எங்கும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளே உணரும் படியும் இல்லாமல் வெளியேயும் எங்கும் அறிந்து கொள்ளும் படியும் இல்லாமல் இருக்கின்றான் இறைவன்.
உள்ளத்து உள்ளே தான் உகந்து எங்கும் நின்றவன்\nவள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்\nபொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்\nகள்ள தலைவன் கருத்து அறியார்களே
உயிர்களின் உள்ளத்திற்கு உள்ளே தானாகவே விரும்பி வீற்றிருக்கின்றவனும், அண்ட சராசரங்கள் எங்கும் நிறைந்து நிற்கின்றவனும், உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும், அனைத்திற்கும் தலைவனும், உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற மாபெரும் தவத்தை உடையவனும், துவாரங்களை கொண்ட உடலுக்குள் கருவிலேயே புகுந்து இருப்பவனும், அந்த உடலின் ஆயுள் முடியும் போது வெளியேறி செல்பவனும், இவை அனைத்தையும் மறைந்து இருந்தே செய்கின்ற தலைவனும் ஆகிய இறைவனை அறிந்து கொள்ளும் முறையை ஆசைகளுக்காக புற வழிபாடு செய்கின்றவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
ஆயத்து உள் நின்ற அறு சமையங்களும்\nகாயத்து உள் நின்ற கடவுளை காண்கிலா\nமாய குழியில் விழுவர் மனை மக்கள்\nபாசத்து உள் பட்டு பதைக்கின்ற ஆறே
மக்கள் கூட்டத்திற்கு உள்ளே வழிகாட்டிகளாக நிற்கின்ற ஆறு விதமான சமயங்களும் உடலுக்கு உள்ளே நிற்கின்ற இறைவனை காண்பது இல்லை. அதனால் இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக வெளிப்புறமாக இந்த ஆறு விதமான சமயங்களைப் பின் பற்றி அவற்றின் வழியே நடக்கின்றவர்கள் உண்மையை அறியாத மாய குழியிலேயே விழுந்து கிடப்பார்கள். அவர்களுடைய மனைவியின் மீதும் பிள்ளைகளின் மீதும் இருக்கின்ற பாசத்தினால் ஆட் கொள்ளப் பட்டு எப்போதும் பரிதவிப்பில் இருக்கின்ற வழியிலேயே வாழ்கின்றார்கள்.
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்\nசால விளக்கும் தனி சுடர் அண்ணலும்\nஞாலம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து\nஊனை விளக்கி உடன் இருந்தானே
அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும், இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால், உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து, அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும் விளக்கி அவர் அறியும் படி செய்து அவருடன் எப்போதும் இருப்பான்.
இரவும் பகலும் இறந்த இடத்தே\nகுரவன் செய்கின்ற குழலியை உன்ன\nஅரவம் செய்யாமல் அவளுடன் சேர\nபரிவு ஒன்றில் ஆளும் பரா பரை தானே
இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற சாதகரின் உள்ளத்தில் குரவம் எனும் மலரை பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால் தனது மாபெரும் கருணை எனும் அருளினால் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள் பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் அருள் சக்தி.
இரு வினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி\nகுரு என வந்து குணம் பல நீக்கி\nதரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்\nதிரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள் தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள் குரு எனும் நிலையில் வந்து சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற அனைத்து தன்மைகளையும் நீக்கி விட்டு, அவளது பெரும் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தை தந்து அருளுவாள். அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால் சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று சிவம் எனும் பரம் பொருளாகவே சாதகரும் ஆகி விடுவார்.
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்\nபணிகிலும் பல் மலர் தூவி பணிவன்\nஅணுகிய ஒன்று அறியாத ஒருவன்\nஅணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே
அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால் ஞானத்தின் உச்சமாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தை அந்த அருட் சக்தியே வழங்குவாள். அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும் பல விதமான மலர்களை தூவி வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால் நம்மை நெருங்கி வரும் அருட் சக்தியை தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள் முடியாத சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது அவன் இருக்கின்ற உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள் எங்கும் இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தாங்குமின் எட்டு திசைக்கும் தலை மகள்\nபூம் கமழ் பொய்கை புரி குழலாளோடும்\nஆங்கு அது சேரும் அறிவு உடையாளர்க்கு\nதூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே
எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால் சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற அமிழ்தம் ஊறி பெருகுவதில் அருள் புரிகின்ற கூந்தலைக் கொண்ட இறைவியோடு அவள் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை கொண்டு சேர்க்கின்ற ஞானத்தை அறிந்து கொண்டவர்களுக்கு இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த ஜோதியாகிய நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பிறப்பை அறுக்கும் பெரும் தவம் நல்கும்\nமறப்பை அறுக்கும் வழி பட வைக்கும்\nகுற பெண் குவி முலை கோமள வல்லி\nசிறப்போடு பூசனை செய்ய நின்றாளே
இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும் அறுத்து விடக் கூடிய மிகப் பெரும் தவத்தை அருளுபவளாகவும் இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை அறுக்கின்ற வழியில் சாதகர்களை செல்ல வைக்கின்றவளாகவும் அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும் அருளுகின்ற சக்தியாகவும் குவிந்த மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும் அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன் என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள் சிறப்பு பொருந்தியவளாக அவர்களை பூஜைகள் செய்ய வைத்துக் கொண்டே அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்.
கன்னிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்\nஎண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும்\nஉள் நிற்பது எல்லாம் ஒழிவது முதல்வனை\nகண் உற்று நின்ற கனி அது ஆகுமே
எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற பெண் தன்மை கொண்ட பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும் எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற மொத்தம் பதினான்கு உலகங்களிலும் பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும் சாதகருக்கு உணர வைத்து, சாதகருக்குள் நிற்கின்ற மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும் அழிய வைக்கின்ற ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து சாதகரின் கண்ணிற்கு உள்ளே நின்று அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக அந்த அருள் சக்தியே இருக்கின்றாள்.
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி\nபண்டு கண்டு ஓயும் பரமன் பரம் சுடர்\nவண்டு கொண்டு ஆடும் வளர் சடை அண்ணலை\nகண்டு கொண்டோர்க்கு இருள் நீங்கி நின்றானே
கண்டு கொண்டோம் இறைவியும் இறைவனும் பிண்ணிப் பிணைந்து தொடர்ச்சியாக விளங்குகின்ற ஆகாயத்தில் இருக்கின்ற ஒளியை. ஆதிகாலத்திலிருந்தே இருக்கின்ற அந்த ஒளியை கண்டு அந்த ஒளியின் நுணுக்கத்தை உணர்ந்தது என்னவென்றால் பரம்பொருளாகிய இறைவனே அந்த பரம் ஜோதியாகவும் இருக்கின்றான் என்பதே ஆகும். வண்டுகள் நறுமணமிக்க மலர்களில் உள்ள தேனை உண்டு களிப்பில் ஆடுவது போல அடியவர்களை தன் அமிழ்தத்தினை உண்டு பேரின்பத்தில் ஆடச் செய்கின்ற நீண்டு வளருகின்ற பிண்ணிய சடையை அணிந்து இருக்கின்ற தலைவனும் அடியவனுமாகிய இறைவனை தமக்குள் இருக்கும் ஜோதியாக கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு மாயையை நீங்கி இறைவன் எப்போதும் அருள் சக்தியாக நிற்கின்றான்.
எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்\nதையலும் தானும் தனி நாயகம் என்பர்\nவைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு\nகையில் கருமம் செய் கோட்டு அது ஆமே
சாதகர்கள் இறைவனை எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் தாம் எடுத்துக் கொண்ட எந்த சாதகத்தின் மூலமாகவும் சாதகம் செய்து வழிபடுகின்ற காலங்கள் எத்தனை எத்தனை வருடங்களாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்று தைப்பது போல பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியும் இறைவனும் சாதகர்கள் வணங்கக் கூடிய அனைத்து வடிவத்திற்கும் அனைத்து தன்மைக்கும் ஒரே தலைவராக இருக்கின்றார் என்பதை தமக்குள் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள். ஆகவே தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து எந்த வடிவத்திலும் எந்த தன்மையிலும் இறைவனை வணங்குகின்ற சாதகர்களுக்கு அவர்களின் கைகளினால் சாதகங்கள் செய்த வழிபாட்டிற்கு அவர்களின் கையில் இருக்கின்ற ரேகைகள் போலவே உடனுக்குடன் பலன்களை தருபவனாக இறைவன் இருக்கின்றான்.
செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்\nஎய்த உணர்ந்தவர் எய்தும் இறைவனை\nமையன் கண் அற பகடு உரி போர்த்த வெம்\nகையன் இவன் என்று காதல் செய்வீரே
சிவந்த மேனியில் அருளை வழங்குபவன் கரிய மேனியில் மாயையால் மறைக்கின்றவன் வெள்ளை மேனியில் அண்ட சராசரங்களிலும் ஜோதியாய் பரவி இருக்கின்றவன் நன்மையைத் தந்து பச்சை மேனியில் ஆன்மாக்களை காத்து அருளுகின்றவன் இப்படி பலவிதமான தன்மைகளை கண்டு உணர்ந்து கொண்டவர்களுக்கு அவர்கள் கண்ட தன்மையிலேயே அருளை வழங்குகின்ற இறைவனை கருமை நிறம் கொண்டு அகங்காரத்தை இல்லாமல் செய்து யானையின் தோல் போன்ற ஆணவத்தை உரித்து எடுத்து தம்மேல் போர்த்திக் கொண்டு நெருப்புக் கணலை கையில் கொண்டு பிறவிகளை அறுத்து முக்தியை அருளபவன் அவனே என்று உணர்ந்து அவன் மேல் பேரன்பு கொள்ளுங்கள்.
கன்னி துறை படிந்து ஆடிய ஆடவர்\nகன்னி துறை படிந்து ஆடும் கருத்து இலர்\nகன்னி துறை படிந்து ஆடும் கருத்து உண்டேல்\nபின்னை பிறவி பிறிது இல்லை தானே
அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடக்கின்ற சாதகர்கள் அந்த முறையை கடைபிடிப்பதின் மூலம் பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை எவ்வாறு பெறுவது எனும் ஞானம் இல்லாதவராக இருக்கின்றார்கள். அருள் சக்தி வருகின்ற வழியின் முறையை கடைபிடித்து அதன் படியே நடந்து பிறவிக்கான வினைகளை அறுத்து பிறவி இல்லாத நிலையை பெறுகின்ற ஞானத்தை தமது இடைவிடாத சாதகத்தினால் சாதகர்கள் அறிந்து கொண்டு விட்டால் இனி பிறக்க வேண்டிய பிறவி என்று வேறு எதுவும் அவர்களுக்கு இல்லாமல் போய் விடும்.
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி\nவெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து\nகுருட்டினை நீக்கி குணம் பல காட்டி\nஅருள் திகழ் ஞானம் அது புரிந்தாளே
சாதகர்கள் தன்னை நினைந்து உருகும் படி செய்து அவர்களோடு எப்போதும் சேர்ந்தே இருந்து மாயையாகிய மயக்கத்தை நீக்கி விட்டு விரைவாக நீங்கிச் செல்லும் படி மிரட்டி வினைகளை அறுத்து விட்டு பேரின்பத்தை அனுபவிக்கும் படி செய்து மாயையினால் உண்மையை அறியும் ஞானக்கண் இல்லாத குருட்டுத் தன்மையை நீக்கி விட்டு இறைவனின் தன்மைகளை பல விதங்களில் கண்டு உணரும் படி செய்து பேரருள் திகழ்கின்ற உண்மை ஞானத்தை சாதகர்கள் அடையும் படி செய்து அருளுகின்றாள் இறை சக்தி.
இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்\nபொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போல்\nமருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி\nஅருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே
மாயையால் சூழப் பட்டு இருக்கின்ற அறையாகிய உடம்பிற்குள் மறைந்து இருக்கின்ற உண்மை பொருளை தேடி அடைந்தால், இருண்ட அறையில் தம்மை சுற்றி இருக்கின்ற பொருள்களை காண்பிக்கும் விளக்கைப் போலவே மூலாதாரத்தில் இருக்கின்ற சோதியை சாதகத்தின் மூலம் ஏற்றி வைத்தால், மாயை சூழ்ந்த மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல் இதயத் தாமரையாகிய மாபெரும் மலரில் வீற்றிருக்கின்ற குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு அவரே அருள் சூழ்ந்து இருக்கின்ற தந்தையாகவும் தாயாகவும் இருப்பார்.
இருள் நீக்கி எண்ணில் பிறவி கடத்தி\nஅருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்\nமருள் நீங்கா வானவர் கோனோடும் கூடி\nபொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே
மாயையை நீக்கி விட்டு தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத பிறவிகளை அந்தந்த பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும் படி செய்து, இறையருளானது எப்போதும் தம்மை விட்டு நீங்கி விடாத படியே ஆதிப் பரம்பொருள் அருளி, தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம் நீங்காமல் இருக்கின்ற வானவர்களின் அரசனாக இருக்கின்ற இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் படி செய்து, என்ன வேண்டுமென்றாலும் அதை பெற்றுக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருந்து நீங்கி விடாத படி பேரின்பத்திலேயே இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே தாம் செய்து கொண்டு இருக்கின்ற சாதகத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் படி செய்து அருளுகின்றது இறை சக்தி.
தீம் புனல் ஆன திகை அது சிந்திக்கில்\nஆம் புனல் ஆய் அறிவார்க்கு அமுதாய் நிற்கும்\nதேம் புனல் ஆன தெளிவு அறிவார்கட்கு\nஓம் புனல் ஆடிய கொல்லையும் ஆமே
நல்ல சுவையோடு இனிமையான தண்ணீரானது எந்த திசையில் இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்த்தால் மேலிருந்த வருகின்ற ஆற்றுத் தண்ணீராகவே அதை அறிந்தவர்களுக்கு நல்ல நீராக அதுவே நிற்கும். அப்போது சேர்ந்து இருக்கின்ற ஆற்றுத் தண்ணீராகிய கிணற்றில் சேமித்து வைக்கும் முறை அறிந்தவர்களுக்கு ஓடுகின்ற ஆற்றுத் தண்ணீரினால் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து விவசாய நிலத்தில் பயிர்களை வளர்க்கும் முறை அதுவாகும்.
இருட்டு அறை மூலை இருந்த குமரி\nகுருட்டு கிழவனை கூடல் குறித்து\nகுருட்டினை நீங்கி குணம் பல காட்டி\nமருட்டி அவனை மணம் புணர்ந்தாளே
இருளில் இருக்கின்ற அறைக்குள் ஒரு மூலையில் வீற்றிருக்கின்ற ஒரு இளம் கன்னியானவள் கண் தெரியாத குருடனாகிய கிழவனோடு ஒன்றாக சேருவது எனும் குறிக்கோளுடன் அவனது குருட்டை நீக்கி நல்ல அழகுகளை பல விதங்களில் காண்பித்து அவளுடைய அழகில் மயங்க வைத்து அந்த கிழவனோடு திருமணம் புரிந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாளே.
சாயுச்சியம் சாக்கிர ஆதீதம் சாருதல்\nசாயுச்சியம் உப சாந்தத்து தங்குதல்\nசாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா\nசாயுச்சியம் மனத்து ஆனந்த சத்தியே
இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது இறைவனுடன் இலயித்து இருக்கின்ற ஆழ் நிலையில் மூழ்கி இருந்தாலும் நினைவு உலகத்திலும் விழிப்பு நிலையில் இருப்பது சாலோகம் எனும் முதல் நிலை ஆகும். இந்த நிலைக்கு உதவுகின்ற பேரமைதி எனும் நிலையிலேயே தங்கி இருப்பது சாமீபம் எனும் இரண்டாம் நிலை ஆகும். இந்த நிலையில் தாமே சிவமாக ஆகி இறைவனின் எல்லை இல்லாத ஒளி உருவத்தை பெற்று இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலை ஆகும். அந்த நிலையில் மனதிற்குள் இறைவனின் பேரின்பத்தில் மூழ்கி இருந்து அவனின் அளவில்லாத சக்தியை அனுபவித்துக் கொண்டே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காம் நிலை ஆகும்.
சைவ சிவனுடன் சம்பந்தம் ஆவது\nசைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்\nசைவ சிவம் தன்னை சாராமல் நீவுதல்\nசைவ சிவ ஆனந்தம் சாயுச்சியம் ஆமே
சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில் இறைவனுடன் நெருங்கிய உறவினர் போல தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும். இந்த நிலையை அடைவதற்கு அந்த வழி முறையின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு இறைவனை மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும். அந்த தர்மத்திலேயே சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு தாம் எனும் எண்ணத்தை சார்ந்து இருப்பதை நீக்கி விட்டு தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும். அந்த தர்மத்தின் பயனால் சிவப் பரம்பொருளின் மேலான பேரின்பத்தை பெற்று அதிலேயே மூழ்கி இறைவனுடனே எப்போதும் சேர்ந்தே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்.
சயில லோகத்தினை சார்ந்த பொழுதே\nதயிலம் அது ஆகும் சராசரம் போல\nபயிலும் குருவின் பதி புக்க போதே\nகயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே
இறைவன் இருக்கின்ற தர்ம உலகத்தை சாதகர் சார்ந்து இருக்கும் போதே அங்கே வீற்றிருக்கின்ற இறைவனுக்கு சாந்து பூசியது போல அண்டத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களும் சுற்றி இருக்கின்றது போலவே அங்கு புகுந்த சாதகரையும் சுற்றி இருக்கும் படி ஆகிவிடும். அது போலவே சாதகர் தமக்கு கற்று கொடுக்கும் இறைவனை உணர்ந்த ஞான குருவின் இடத்திற்குள் நுழைந்த போதே கயிலாய மலையில் வீற்றிருக்கின்ற இறைவனின் ஒளி பொருந்திய உருவமாகவே சாதகரும் ஆகி விடுவார்.
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம்\nதங்கும் சன் மார்கம் தனில் அன்றி கை கூடா\nஅங்கத்து உடல் சித்த சாதனர் ஆகுவர்\nஇங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே
நிலை பெற்ற இறை உருவம் என்பது சாதகர்கள் அட்டாங்க யோகத்தில் எட்டாவது யோகமாகிய சமாதி நிலையில் கிடைப்பதாகும். நிலை பெற்ற உண்மை வழி முறையாக இருக்கின்ற இறைவனை அடைகின்ற ஞான வழிமுறை அல்லாமல் வேறு எதனாலும் சாதகர்களுக்கு இந்த சமாதி நிலை கிடைக்காது. இந்த சமாதி நிலையை அடைந்த சாதகர்களின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறைவனையே நினைத்து செயலாற்றிக் கொண்டு இருக்கின்ற சித்த நிலை பெற்ற சாதகராக ஆகி விடுவார். இதன் பயனால் இந்த உலகத்திலேயே இந்த சாதகர் தாமே ஒரு குற்றமும் இல்லாத தூய்மையான யோகத்தின் வடிவமாக வீற்றிருப்பார்.
பாசம் பசு ஆனது ஆகும் இச் சாலோகம்\nபாசம் அருள் ஆனது ஆகும் இச் சாமீபம்\nபாசம் சிவம் ஆனது ஆகும் இச் சாரூபம்\nபாசம் கரை பதி சாயுச்சியம் ஆமே
உலகப் பற்றுக்களானது ஆன்மாவாக இருக்கின்ற உயிர்களுக்குள் மாயையால் மறைத்து இருக்கும் போது இறைவனை அடைய வேண்டும் என்று சரியை கிரியை யோகம் ஞானம் ஆகியவற்றின் மூலம் சாதகம் செய்கின்ற உயிர்களுக்கு இந்த உலகத்திலேயே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு அருகில் செல்லுகின்ற நிலை கிடைக்கும். அந்த சாதகத்தை தொடர்ந்து செய்யும் போது உலகப் பற்றுக்களானது சிறுது சிறிதாக விலகி இறையருள் பெருகி தம்மை அதுவே இந்த உலகத்திலேயே இறைவனுக்கு மிகவும் அருகில் செல்லுகின்ற நிலையை கொடுக்கும். அந்த நிலையிலும் தொடர்ந்து சாதகத்தை செய்யம் போது உலகப் பற்றுக்களானது நீங்கி இறைவனின் மேல் பற்று கொள்ளும் படி சிவமாகவே தம்மையும் ஆகும் படி செய்து இந்த உலகத்திலேயே இறைவனின் ஒளி உருவத்தை பெறுகின்ற நிலையை கொடுக்கும். அந்த நிலையிலும் மேன்மை பெற்று சாதகத்தை தொடரும் போது பற்றுக்கள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி முக்திக்கு எல்லையாக இருக்கின்ற இறைவனிடம் சென்று சேரும் படி செய்து இறைவனுடனே எப்போதும் இருக்கின்ற நிலையை கொடுக்கும்.
சமயம் கிரிதையில் தன் மனம் கோயில்\nசமய மனு முறை தானே விசேடம்\nசமயத்து மூலம் தனை தேறல் மூன்று ஆம்\nசமய அபிடேகம் தான் ஆம் சமாதியே
சமயம் எனப்படுவது கிரியையில் தன் மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும். சமயத்தில் மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வழி முறைகளாக இருப்பது தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின் விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும். அந்த சமயத்தின் மூலமே தாம் யாராக இருக்கின்றோம் என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான நிலைகளை அடைவது ஆகும். சமயத்தில் அபிஷேகம் என்பது தானே இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்.
சாலோகம் ஆதி சரிதை ஆதியில் பெறும்\nசாலோகம் சாமீபம் தங்கும் சரிதை ஆம்\nமாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்\nபாலோகம் இல்லா பரன் உரு ஆகுமே
இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை முதலாகிய சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும் இறைவனை அடைவதற்கான சரியை முதலாகிய சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால் பெறப்படும். இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம் இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலையானது சரியையை தொடர்ந்து முறைப்படி செய்து கொண்டு இருப்பதால் நமக்கு கிடைக்கும். இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே சேர்ந்து இருந்தால் அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு அதுவே வழியாக இருக்கும். அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற வடிவங்களில் இல்லாத பரம்பொருளின் ஒளி உருவத்தோடு அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்.
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்து இட்டும்\nபாசி குளத்தில் வீழ் கல் ஆய் மனம் பார்கில்\nமாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை\nநேசத்து இருத்த நினைவு அறியாரே
இறைவனை போற்றி பாடியும் மந்திரங்களை செபித்தாலும், பூஜை செய்தாலும், அதிக அளவில் மலர்களை கொய்து வந்து சாற்றினாலும், பாசி படிந்த குளத்தில் விழுந்த கல்லை போலவே மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையை பார்த்தால் மாசு மரு எதுவும் இல்லாத தூய்மையான சோதியாக நீல நிற கழுத்தைக் கொண்டு அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை தங்களின் தூய்மையான அன்பில் வைத்து இருக்கும் எண்ணத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி\nஉன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழ\nகண் அவன் என்று கருதும் அவர்கட்கு\nபண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே
அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.
அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு\nசிந்திப்பன் என்றும் ஒருவன் செழி கழல்\nவந்திப்பன் வானவர் தேவனை நாள் தோறும்\nவந்திப்பது எல்லாம் வகையின் முடிந்தே
காலையிலும் மாலையிலும் மனதாலும் அதன் பிறகு அதற்கு ஏற்றபடி உடலாலும் வழிபாடு செய்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன். எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற ஒருவனையும் நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின் திருவடிகளை போற்றி வணங்குவேன். வானவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற இறைவனை தினம் தோறும் இவ்வாறு நான் போற்றி வணங்குவது எல்லாமே இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறைப் படியே ஆகும்.
அது இது ஆதி பரம் என்று அகலம்\nஇது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை\nவிதி வழியே சென்று வேந்தனை நாடும்\nஅது விதி நெஞ்சில் அழிகின்ற ஆறே
அதுவும் இதுவும் ஆதியாக இருக்கின்ற பரம் பொருள் என்று நினைத்துக் கொண்டு பரந்து விரிந்து இருக்கின்ற உலகில் இதுவே இறைவனை அடையும் வழி என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள் யாரும் இல்லை. அப்படி இல்லாமல் தங்களுக்கு விதிக்கப் பட்ட வழியில் சென்று தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக தேடி அடைகின்ற வழி முறையே விதி என்று கடைபிடிக்கின்றவர்களின் மனதில் இருந்து ஆசைகளை அழித்து இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்.
எளியன தீபம் இடல் அலர் கொய்தல்\nஅளி இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்\nபளி பணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி\nதளி தொழில் செய்வது தான் தாச மார்கமே
தங்களால் இயன்ற வரை தீபங்களை ஏற்றி வைத்தல் நறுமணமிக்க மலர்ந்த மலர்களை கொய்து சாற்றுதல் இறைவன் இருக்கின்ற இடங்களை சாணி பூசி மெழுகி அந்த இடத்தை சுத்தமாக வைத்தல் இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல் இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு சேவை செய்வதற்கு பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல் பல விதமான அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல் முதல் கொண்டு கோயில்களுக்கு தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு செய்து பணி புரிவது தான் இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறையாகும்.