classic
stringlengths
19
1.22k
Description
stringlengths
5
2.28k
திரு மன்னும் சற் புத்திர மார்க சரிதை\nஉரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்\nகரு மன்னு பாசம் கை கூப்ப தொழுது\nஇரு மன்னு நாள் தோறும் இன்பு உற்று இருந்தே
இறை சக்தியானது ஆன்மாவிற்குள் நிலை பெற்று இருக்கும் இறைவனை தந்தையாக பாவித்து தம்மை மகனாக பாவிக்கின்ற வழி முறையே இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழி முறையை சொல்லுகிறேன் உடல் இருக்கும் வரை நிலை பெற்று வாழுகின்ற உலகத்தவர்களே கேளுங்கள். கருவிலேயே நிலை பெற்று வருகின்ற பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு அவனை இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி தொழுது வணங்கி அவனை நினைத்துக் கொண்டே இருப்பதில் நிலை பெற்று தினம் தோறும் அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
நின்று தொழுவன் கிடந்து எம் பிரான் தன்னை\nஎன்றும் தொழுவன் இயற் பரஞ் சோதியை\nதுன்று மலர் தூவி தொழுமின் தொழும் தோறும்\nசென்று வெளிப்படும் தேவர் பிரானே
எம் தந்தையாகிய இறைவனை மனதை ஒருநிலைப் படுத்தி தொழுகின்றேன் எதை செய்தாலும் அதை அவனை நினைத்தே செய்கின்றேன். தானாகவே இருக்கின்ற பரம்பெரும் சோதியாக இருக்கின்ற அந்த இறைவனை எப்போதும் தொழுது கொண்டே இருக்கின்றேன். உங்களுக்கும் தந்தையாகிய அந்த இறைவனை மாசு இல்லாத மலர்களைத் தூவி நீங்களும் தொழுங்கள் அப்படி தொழுது கொண்டே எப்போதும் இருக்கின்ற போது நீங்கள் செய்கின்ற அனைத்திற்குள்ளும் சென்று சோதியாக வெளிப்பட்டு அருள்வான் தேவர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவன்.
உயர்ந்து பணிந்தும் உகந்தும் தழுவி\nவியந்தும் அரன் அடி கை முறை செய்யின்\nபயந்தும் பிறவி பயன் அது ஆகும்\nபயந்தும் பரிக்கில் பான் நன்மையின் ஆகுமே
ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும் இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும் அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும் இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும் அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்படைந்தும் இறைவனின் திருவடிகளுக்கு தமது கைகளால் தொண்டுகளை செய்தால் அந்த தொண்டே தாம் எடுத்த பிறவிக்கு கிடைக்கின்ற மிகப் பெரும் பயனாக இருக்கும். அப்படி கிடைத்த அருளினால் இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால் தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும் இருக்கின்றான்.
அரும் கரை ஆவது அவ் அடி நீழல்\nபெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை\nவரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்\nஒரும் கரை ஆய் உலகு ஏழின் ஒத்தானே
சென்று சேருவதற்கு மிகவும் அரியதான எல்லையாக இருப்பது இறைவனின் திருவடிகளின் நிழலாகும். பிறை நிலாவை சூடிக்கொண்டு இருக்கும் இறைவனின் ஆணைகளே பிறப்பு இல்லாத மாபெரும் நிலையை பெறுகின்ற எல்லையாக இருக்கின்றன. தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின் எல்லைகளுக்கு ஏற்றபடி இந்த உலகத்தில் நிலை பெற்று வாழுகின்ற உயிர்களுக்கு எல்லாம் அவற்றின் வினைகளை தீர்த்துக் கொண்டு சென்று சேரும் கரையாக இருக்கின்ற உலகங்கள் ஏழு விதத்திற்கும் ஒத்து இருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்.
அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்\nமறு கால் நரை அன்னம் தாமரை நீலம்\nகுறுகார் நறு மலர் கொய்வன கண்டும்\nசிறு கால் அரன் நெறி செல்லு கிலாரே
ஆறு கால்களைக் கொண்ட தேனீக்கள் தேனுள்ள மகரந்த மலர்களை ஆராய்ந்து தேடி அலைந்து தேனை சேகரிப்பதையும் இன்னொரு வகையில் வெள்ளை நிறத்தில் உள்ள அன்னப் பறவைகள் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும் இறைவனின் அடியவர்கள் நறுமணம் மிக்க மலர்களை கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும் பார்த்தும் சிறுது காலம் கூட தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பெறும் வழியில் செல்லாமல் இருக்கின்றார்கள்.
பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திடல்\nஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை\nநேசித்து இட்ட அன்னமும் நீர் சுத்தி செய்தல் மற்று\nஆசு அற்றல் சற் புத்திர மார்கம் ஆமே
இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவருக்கு பூஜை செய்தல், மந்திரங்களை பாடுதல், போற்றி வணங்குதல், தரிசனம் செய்தல், குற்றம் இல்லாத நன்மையான தவத்தை மேற்கொள்ளுதல், உண்மையே பேசுதல், அழுக்கு இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல், அன்போடு சமைத்து வைத்த உணவை நைவேத்யமாக படைத்தல், நீரினால் சுத்தம் செய்து சமர்ப்பணம் செய்தல் ஆகிய இவை அனைத்தையும் தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் இல்லாமல் இருந்து செய்வதே இறைவனின் பிள்ளையாக தன்னை பாவித்து அவனை அடைகின்ற வழி முறை ஆகும்.
மேவிய சற் புத்திர மார்கம் மெய் தொழில்\nதாவிப்பது ஆம் சக மார்கம் சக தொழில்\nஆவது இரண்டும் அகன்று சக மார்க\nதேவியோடு ஒன்றல் சன் மார்க தெளிவே
உறவினால் உண்மையான தந்தையாக இறைவனையும் அவருக்கு பிள்ளையாக தம்மையும் பாவிக்கின்ற வழி முறையானது உடலால் செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் மற்றும் சரியாக செய்ய வைக்க இறை சக்தி உடனிருந்து தோழமை வழி முறையில் மனதுடன் எப்போதும் சேர்ந்து இருந்து செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் ஆகிய இந்த இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும், நமது உடலும் மனமும் இவற்றை செய்கின்றன என்கின்ற எண்ணமும் நீங்கும் படி செய்து, தோழமை வழி முறையில் தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே உண்மை வழி முறையில் மேன்மையான நிலையில் கிடைக்கின்ற தெளிவு ஆகும்.
வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும்\nவளம் கனி ஒப்பது ஓர் வாய்மையின் ஆகும்\nஉளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்கு\nபழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே
செழுமையாக பழுத்த பழத்தை போலவே செழுமையாக பிரகாசிக்கின்ற தேஜஸான உடலை பெற்று இருக்கின்ற அடியவர்களுக்கு அவர்களுடைய தேகம் செழுமை பொருந்திய பழுத்த பழத்தைப் போல இருப்பதற்கு காரணம் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தவறாமல் கடைபிடித்த ஒரு வாய்மை எனும் தர்மத்தினால் ஆகும். அந்த அடியவர்களது உள்ளமானது இறைவன் மேல் கொண்ட தூய்மையான அன்பினால் கனிந்து இருப்பதனாலும் அவர்கள் கடைபிடித்து வந்த தர்மத்தின் பயனாலும் எப்போதும் இன்பத்தோடு இருக்கின்றார்கள். நன்றாக பழுத்த பழத்திற்குள் கனிந்து இருக்கும் சுவை போலவே அவர்களின் பழுத்த பழம் போன்ற உள்ளுக்குள் சுவை போல சேர்ந்து தோழமையுடன் நிற்கின்றான் இறைவன்.
பிணங்கி நிற்கின்றவை எந்தையும் பின்னை\nஅணங்கி எறிவன் அயிர் மன வாளால்\nகணம் பதினெட்டும் கருதும் ஒருவன்\nவணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே
தமது ஆன்மாவோடு ஒன்றாக பிணைந்து தோழமையுடன் நிற்கின்ற எமது தந்தையாகிய இறைவனை அறிந்து கொள்ளாமல் இருக்கின்ற உயிரும் அந்த உயிரை வருத்தக் கூடிய கர்மங்களையும் உயிரின் நுண்ணியமான மனம் என்கின்ற கூர்மையான வாளைக் கொண்டு தமது அருளால் அறுத்து எறிகின்றான் இறைவன். பதினெட்டு வகையான தேவ கணங்களாலும் எப்போதும் எண்ணப் படுகின்ற ஒருவனாகிய இறைவனை தமக்குள்ளேயே அறிந்து வணங்கும் வல்லமை பெற்ற சாதகரின் சிந்தைக்குள் அந்த இறைவன் தோழமையுடன் வந்து நின்று அருளுகின்றான்.
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்\nமேதை ஆதி ஈர் எண் கலந்தது விண் ஒளி\nபோத ஆலயத்து புலன் கரணம் புந்தி\nசாதாரணம் கெடல் ஆம் சக மார்கமே
சாதனைகளின் மூலம் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் ஆராய்ச்சி செய்து அதன் வழியாக உடலுக்குள் இருக்கின்ற நாடிகளை சுத்தம் செய்து உடல் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற மேதைக் கலை முதலாகிய பதினாறு கலைகளோடு விண்ணில் இருக்கின்ற ஒளி வடிவமான இறை சக்தியானது கலந்தது. அதன் பிறகு அறிவின் ஆலயமாக இருக்கின்ற உடலுக்குள் இருக்கின்ற ஐந்து புலன்களும் நான்கு கரணங்களும் புத்தியும் தங்களின் இயல்பான செயல்களை இழந்து இறை நிலையை பெறுவதே இறைவனோடு தோழமையாக இருக்கின்ற வழி முறையாகும்.
யோகமும் போகமும் யோகியர்கு ஆகும் ஆம்\nயோக சிவ ரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்\nயோகம் புவியில் புருட ஆதி சித்தி ஆம்\nஆகம் இரண்டும் அழியாத யோகிக்கே
யோகமும் அதனால் கிடைக்கின்ற பேரின்பமும் யோக சாதனை புரிகின்ற யோகியர்களுக்கே அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு கிடைக்கும். யோகத்தில் இறைவனின் ஒளி உருவத்தை தமக்குள்ளே தரிசிக்கின்ற யோகியர்களின் உள்ளத்திற்குள் என்றும் இடைவிடாத இறை சிந்தனையாக இருக்கின்ற ஒரு யோகமே இந்த உலகத்தில் இருக்கின்ற யோகியர்களின் ஆன்மாவிற்கு ஆதியாகிய பரமாத்மாவின் அருள் சக்தியாக கிடைக்கும். அந்த அருள் சக்தியால் உடல் மனம் ஆகிய இரண்டும் என்றும் அழியாமல் இருக்கின்ற நிலையை யோகியர்கள் பெறுவார்கள்.
யோகமும் ஆதியின் உள்ளே அகல் இடம்\nயோக சமாதியின் உள்ளே உளர் ஒளி\nயோக சமாதியின் உள்ளே உள சத்தி\nயோக சமாதி உகந்தவர் சித்தரே
யோகம் என்று அறியப் படுகின்ற சாதனையானது ஆதியாக இருக்கின்ற இறைவனின் உள்ளேயே அடங்கி அண்ட சராசரங்கள் அனைத்திலும் இறைவனோடு இடம் பெற்று இருக்கின்றது. அந்த யோகத்தில் ஆழ்ந்து இருக்கின்ற சமாதி நிலையில் சாதகருக்கு உள்ளே என்றும் நிலைபெற்று இருக்கின்ற ஒளியாக இறைவன் இருக்கின்றான். அந்த ஒளியாகிய இறைவனின் சக்தியை சமாதி நிலையில் இருந்து கொண்டே அனுபவித்துக் கொண்டு பேரின்பத்திலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களே சித்தர்கள் ஆவார்கள்.
மருவும் துவாதெச மார்கமும் இல்லார்\nகுருவும் சிவனும் சமையமும் கூடார்\nவெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்\nஉருவும் கிளையும் ஒருங்கு இழப்போரே
தியானத்தின் மூலம் தலைக்கு மேலே பன்னிரண்டு அங்குல தூரத்தில் இருக்கின்ற துவாதச வெளியில் இருக்கின்ற இறைவனை அறிகின்ற யோக வழிமுறையை அறிந்து கொள்ளாதவர்களும் குருவின் மூலம் ஞானத்தை பெறாதவர்களும் இறைவன் மேல் பக்தி செய்யாதவர்களும் இறைவனை வழிபடும் தமது குல வழக்கத்தை கைவிடுபவர்களும் ஆகிய இவர்களுடன் சேர்ந்து இருப்பது வீண் என்று லட்சுமி தேவியும் அவர்களை விட்டு வேண்டாம் என்று விலகி விடுவாள். அவர்களின் உடலும் உடலைச் சுற்றி இருக்கின்ற நன்மைகளும் அழிந்து இழந்து விடுவார்கள்.
சன் மார்கம் தானே சக மார்கம் ஆனது\nமன் மார்கம் ஆம் முத்தி சித்திக்கும் வைப்பது ஆம்\nபின் மார்கம் ஆவது பேரா பிறந்து இறந்து\nஉன் மார்க ஞானத்து உறுதியும் ஆமே
உண்மை வழியில் ஞானம் பெற்ற சாதகர்களுக்கு தானாகவே இறைவன் தோழமையுடன் வழிகாட்டும் நெறி முறையாக சக மார்கம் [தோழமை வழிமுறை] இருக்கின்றது. இதுவே எப்போதும் நிலைத்து நிற்கின்ற வழியாக இருந்து முக்தி பேறு அடைவதற்கும் நினைப்பதை எல்லாம் செயல்பட வைப்பது ஆகவும் இருக்கின்றது. இதற்கு நேர் எதிரான வழியில் செல்பவர்கள் இடைவிடாமல் பிறவி எடுத்து இறந்து மீண்டும் மீண்டும் மனம் செல்லுகின்ற வழியில் செல்லும் போதும் இறைவன் தோழமையுடன் மறைந்து இருந்து ஒரு காலத்தில் உண்மை ஞானம் உறுதியாக கிடைக்கும் படி அருளுவார்.
மார்கம் சன் மார்கிகள் கட்ட வகுப்பது\nமார்கம் சன் மார்கமே அன்றி மற்று ஒன்று இல்லை\nமார்கம் சன் மார்கம் எனும் நெறிவை காத்தோர்\nமார்கம் சன் மார்கம் அதி சித்த யோகமே
தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற வழியாகிய உண்மை வழி முறையை கடைபிடிப்பவர்கள் முறைப்படி கட்டமைத்து வகுத்து வைத்த நெறி முறைகள் அல்லாமல் வேறு ஒரு வழி முறைகளும் இல்லை. உண்மை வழி முறை என்று சொல்லப்படும் அந்த நெறி முறைகளை வகுத்து வைத்த முறைப்படி தவறாமல் காத்து கடை பிடிப்பவர்களுக்கு எண்ணத்தை எல்லாம் சிவப் பரம்பொருளின் மேல் வைத்து செய்கின்ற மிகவும் உயர்ந்த யோகமாக அந்த உண்மை வழியே இருக்கின்றது.
பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி\nகசியாத நெஞ்சம் கசிய கசிவித்து\nஓர் அசி பாத உண்மை சொரூப உதையத்து உற்று\nஅசைவானது இல்லாமை ஆன சன் மார்கமே
ஆன்மாவில் இருகின்ற “நான்” எனும் எண்ணத்தையும் பாசத் தளைகளையும் நீக்கி இறைவனுடன் ஒன்று சேர்த்து எதனாலும் உருகாமல் இருக்கின்ற நெஞ்சத்தையும் இறைவனின் மேல் கொண்ட தூய அன்பினால் உருகும் படி உருக வைத்து ஒரு ஆன்மாவாக இருப்பதுவே இறைவனின் பேருண்மை சுய உருவமாக இருக்கின்றது என்கின்ற எண்ணத்தை உருவாக்கி அதனை உணர வைத்து அதிலேயே இலயிக்க வைத்து அசைவில்லாமல் இருக்கும்படி ஆக்குகின்றது உண்மை வழியாகும்.
அன்னிய பாசமும் ஆகும் கருமமும்\nஉன்னும் அவத்தையும் மூல பகுதியும்\nபின்னிய பாசமும் பேத ஆதி பேதமும்\nதன்னோடும் கண்டவர் சன் மார்கத்தோரே
தனக்கு வேறாகவும் தன்னை அடிமைப்படுத்தியும் தன்னுள் அடங்கியும் இருக்கின்ற பாசத்தையும் அதற்கு காரணமாகும் கர்மத்தையும் அந்த கர்மத்தின் பயனால் அனுபவிக்கின்ற அனைத்து வாழ்க்கை அனுவங்களையும் அந்த அனுபங்களுக்கு மூலமாக இருக்கின்ற ஆசைகளையும் அதனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்ற பாசக் கட்டுகளையும் அதனோடு சேர்ந்து இருக்காமல் விலகி இருக்கின்ற ஆன்மாவையும் ஆதியில் முதன் முதலில் அந்த ஆன்மா இறைவனை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தையும் தமக்கு உள்ளும் வெளியிலும் கண்டு அறிந்து கொண்டவர்களே உண்மையான வழியை கடை பிடிப்பவர்கள் ஆவார்கள்.
சன் மார்கம் ஏத்த வரும் பெரும் சீடர்க்கு\nபின் மார்கம் மூன்றும் பிறவி இயல்பாம் என்றால்\nநன் மார்கம் தான் சிவனோடு உற நாடலே\nசொன் மார்கம் சொல்ல சுருதி கை கொள்ளுமே
உண்மையான வழி முறையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி சிறப்பிக்க வருகின்ற பெருமை பெற்ற சீடர்களுக்கு அதற்கு பிறகு இருக்கின்ற வழி முறைகளாகிய சக மார்கம் சற்புத்திர மார்கம் தாச மார்கம் ஆகிய மூன்றும் பிறவியிலேயே இயல்பாக கிடைத்து விடுகின்றது. ஏன் என்றால் நன்மையான வழி முறையானது அவர்கள் சிவப் பரம்பொருளோடு சேர்ந்து இருப்பதை விரும்பி தேடிக்கொண்டே இருப்பதால் ஆகும். ஆகவே குரு தமது சீடர்களுக்கு அறிவுறுத்தக் கூடிய வழி முறைகளாக வேதங்கள் கொடுத்த அனைத்து முறைகளும் அவர்களுக்கு கைவரப் பெறும்.
சன் மார்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம்\nபின் மார்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும்\nதுன் மார்கம் விட்ட துரிய துரிசு அற்றார்\nசன் மார்கம் தான் அவன் ஆகும் சன் மார்கமே
உண்மையான வழிக்கு உதவுகின்ற கருவியாக இருப்பது ஞானத்தின் மூலம் அன்பு வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொள்ளுவது ஆகும். மற்ற வழிகளுக்கு கருவியாக இருக்கின்ற அனைத்தும் அறியாமையில் இருப்பவர்களுக்கு பெற முடியாததாகவே நிற்கின்றது. தீய வழிகளை நீக்கி விட்ட ஆழ்நிலை தியான நிலையில் அழுக்குகள் எதுவும் இல்லாதவர்களாக பேரின்பத்தில் இருப்பதுவே உண்மையான வழி முறையில் தாமே சிவம் ஆகுகின்ற சன் மார்க்க வழியாகும்.
சன் மார்கத்தார்க்கு முகத்தோடு பீடமும்\nசன் மார்கத்தார்க்கும் இடத்தோடு தெய்வமும்\nசன் மார்கத்தார்க்கும் வருக்கம் தெரிசனம்\nமெய் மார்கத்தார்க்கும் இயம்புவன் கேண்மினே
உண்மையான வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின் முகமே இறைவன் அமர்ந்து இருக்கின்ற பீடமாகவும் அவர்கள் இருக்கின்ற இடமே இறைவன் வீற்றிருக்கின்ற கோயிலாகவும் அவர்களின் கூட்டத்தை காண்பதே இறைவனின் தரிசனமாகவும் இருக்கின்றது. தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருக்கின்ற உண்மையை தெரிந்து கொள்ளுகின்ற வழியை தேடுகின்ற அனைவருக்கும் இதுவே வழி என்று யான் எடுத்து சொல்கின்றேன் கேட்டுக் கொள்ளுங்கள்.
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று\nமோனம் அதாம் ஒழிப்பான் முத்தர் ஆவதும்\nஈனம் இல் ஞான அனுபூதி இல் இன்பமும்\nதான் அவன் ஆய் அற்றல் ஆன சன் மார்க்கமே
குருவருளால் தெளிவு பெற்றவர்கள் தாம் சிவமாகவே ஆகுவதும் தம்மிடம் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி ஆகிய ஐந்து விதமான மலங்களையும் அழிப்பதும் மௌனம் என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலையில் எண்ணங்கள் அனைத்தையும் அழித்து முக்தி நிலை பெற்றவராக ஆகுவதும் ஒரு குறையும் இல்லாத பேரறிவு ஞானத்தை தமது அனுபவித்தில் உணர்ந்து அதில் பேரின்பம் பெறுவதும் தாமே சிவமாக ஆகி தான் எனும் எண்ணமே இல்லாமல் இருப்பதும் ஆகிய இவை அனைத்துமே உண்மையான வழிகளாகும்.
தெளிவு அறியாதார் சிவனை அறியார்\nதெளிவு அறியாதார் சீவனும் ஆகார்\nதெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்\nதெளிவு அறியாதவர் தீரா பிறப்பே
குருவின் அருளால் ஞானத் தெளிவை அறியாதவர்கள் சிவப் பரம்பொருளை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தமது ஆத்ம ஞானத்தில் முழுமை அடைய மாட்டார்கள். அவர்கள் சிவமாக ஆக மாட்டார்கள். அவர்களுக்கு எப்போதும் தீர்ந்து விடாமல் பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய\nபரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட\nகுரு பத்தி செய்யும் குவலயத்தோர்க்கு\nதரு முத்தி சார்பு ஊட்டும் சன் மார்கம் தானே
குருவை இறைவனாகவே தரிசிப்பதும் அவரை பூசிப்பதும் குருவின் திருவுருவத்தை தியானத்தில் சிந்தனை செய்வதும் குருவின் அருகாமையை அனுவிப்பதும் அவரது புகழை போற்றி பாடுவதும் அவரது திருவடிகளில் இருக்கும் பாதுகைகளை தமது தலை மேல் சூடுவதும் ஆகிய இவற்றை எல்லாம் செய்து தமது குருவுக்கு பக்தியை முறைப்படி செய்கின்ற உலகத்தவர்களுக்கு அதன் பயனால் தருகின்ற முக்தி நிலைக்கு சார்பாக இருந்து அனுபவிக்க வைப்பது உண்மையான வழியாகும்.
சைவ பெருமை தனி நாயகன் நந்தி\nஉய்ய வகுத்த குரு நெறி ஒன்று உண்டு\nதெய்வ சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய\nவையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே
சைவம் எனும் வழிமுறைக்கு பெருமையளிக்கும் தனிப் பெரும் தலைவனாகவும் குருநாதராகவும் நிற்கின்ற இறைவன் ஆன்மாக்கள் மேல் நிலையை அடைவதற்கு அவரவரது பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து அருளிய குரு வழி முறை ஒன்று இருக்கின்றது. அதுவே தெய்வ அம்சமாகிய சிவத்தை அடைகின்ற வழி முறை ஆகும். அதனுடன் உண்மை வழியாகிய தாமும் பார்க்கின்ற பொருளும் அந்த இறைவனாகவே இருக்கின்ற தத்துவமும் சேர்ந்து மேல் நிலையை அடைவதற்காக உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து வைத்து அருளுகின்றான் குரு நாதனாக நிற்கின்ற இறைவன்.
சாற்றும் சன் மார்க்கம் ஆம் தற் சிவ தத்துவம்\nதோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு\nசீற்றம் ஒழிந்து சிவ யோக சித்தர் ஆய்\nகூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே
எடுத்து சொல்லப் படுகின்ற உண்மையான வழியாக இருப்பது தாமே சிவமாக இருக்கின்ற தத்துவம் ஆகும். பல விதமாக காணுகின்ற அனைத்து தோற்றங்களாக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமுமாக இருக்கின்ற இறை தத்துவத்தை தமக்குள்ளே கண்டு உணர்ந்து அதன் பயனால் காமம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் ஆகிய அனைத்தும் அழிந்து போய் சிவ யோகத்தையே சித்தமாக கொண்டு இருப்பவர்களாகி இறப்பு என்கின்ற ஒன்றை வென்று விட்டவர்களே இந்த சன் மார்க்கம் என்று சொல்லப் படுகின்ற இறை தத்துவத்தின் பொருளை அறிந்தவர்கள் ஆவார்கள்.
ஞான சமையமே நாடும் தனை காண்டல்\nஞான விசேடமே நாடும் பரா உதயம்\nஞான நிர்வாணமே நன் நெறிவன் அருள்\nஞான அபிடேகமே நற் குரு பாதமே
ஞானமானது சமயம் எனப்படுகின்ற சரியையில் முழுமையாக இருப்பது வெளியில் தேடி செல்லுகின்ற இறைவனை தனக்குள் கண்டு உணர்வது ஆகும். ஞானமானது விசேடம் எனப்படுகின்ற கிரியையில் முழுமையாக இருப்பது தாம் தேடுகின்ற பரம் பொருளாகிய இறைவன் தமக்குள்ளேயே ஞானமாக உருவாகுவது ஆகும். ஞானமானது நிர்வாணம் எனப்படுகின்ற யோகத்தில் முழுமையாக இருப்பது நன்மையை கொடுக்கின்ற நெறிகளாக இருக்கின்ற இறைவனின் அருளை பரிபூரணமாக பெறுவது ஆகும். ஞானமானது அபிடேகம் எனப்படுகின்ற ஞானத்தில் முழுமையாக இருப்பது நன்மையே வடிவாக குருநாதனாக இருக்கின்ற இறைவனின் திருவடிகளே ஆகும்.
நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன்\nபுண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோர்\nகண்ணிய நேயம் கரை ஞானம் கண்டு உளோர்\nதிண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே
தமக்கு கிடைக்கப் பெற்ற ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை ஞானத்தில் யோகம் ஞானத்தில் ஞானம் ஆகிய நான்கு நிலைகளையும் கிடைக்கப் பெற்றவர்கள் புண்ணியம் பாவம் என்கின்ற நிலைகளை கடந்து நின்று எந்த விதமான பற்றுகளும் இல்லாமல் இருப்பவர்கள். மேன்மையான அன்பிற்கு எல்லையாக இருக்கின்ற இறை ஞானத்தை கண்டு அதிலேயே பேரன்பாக இருப்பவர்கள். இவர்களே உறுதியாக எந்தவிதமான மாசுக்களும் இல்லாமல் தூய்மையாக இருக்கின்ற சிவ நிலையில் முக்தியாக இருக்கின்ற சித்தர்கள் ஆகும்.
ஞானத்தின் ஞான ஆதி நான்கும் ஆம் ஞானிக்கு\nஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்\nஞானத்தில் யோகமே நாத அந்தம் நல் ஒளி\nஞான கிரிகையே நன் முத்தி நாடலே
ஞானத்தில் முழுமை பெற்ற ஞானத்திற்கு முதலாக இருக்கின்ற நான்கு விதமான நிலைகளாக ஞானிக்கு இருப்பதில் ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமானது நான் இது எனது என்கின்ற எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் அனைத்தும் இறைவனே என்று இருக்கின்ற நிலையாகும். யோகத்தில் முழுமை பெற்ற ஞானமானது சத்தத்திற்கு எல்லையாக இருக்கின்ற நன்மையே வடிவான ஜோதியாகும். கிரிகையில் முழுமை பெற்ற ஞானமானது நன்மை தரும் முக்தியை தேடிச் செல்லுதல் ஆகும். சரியையில் முழுமை பெற்ற ஞானமானது இறைவனை நாடிச் சென்று அடைவது ஆகும்.
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்கும் ஆம்\nமோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து\nமேல் நிற்றல் ஆம் சத்தி வித்து விளைந்திடும்\nதான் இக் குலத்தோர் சரிதை கிரிகையே
உண்மையான ஞானத்தை பெற்ற ஞானிக்கு அவருடனே இருக்கின்ற குணங்களாக ஞானத்தில் சேர்ந்து இருக்கின்ற சரியையில் முழுமை பெற்ற ஞானமும் கிரியையில் முழுமை பெற்ற ஞானமும் யோகத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஞானத்தில் முழுமை பெற்ற ஞானமும் ஆகிய நான்கு விதமான நிலைகள் இருக்கின்றன. இந்த நிலைகளை அடைந்து மௌன நிலைக்கு சென்று விட்ட ஞானிக்கு இந்த நான்கு நிலைகளில் ஒன்று கூட குணமாக சேர்ந்து இருப்பதற்கு முந்தைய காலத்தில் அவர் உலகப் பற்றுக்களில் மயங்கி இருக்கும் போது அவருக்கு மேல் நின்று அருளுகின்றதாகிய இறை சக்தியானது அவர் கடைபிடித்த வழிகளின் பயனால் விதையைப் போல ஞானம் விளைந்து விடும். அதன் பயனால் மௌன நிலை என்ற உச்சத்திற்கு சென்று நான்கு விதமான ஞான நிலைகளையும் தம்முடைய குணங்களாக கொண்ட இந்த ஞானியர்கள் அனைவரும் இனி இறைவனை அடைய வேண்டும் என்று சரியையும் கிரியையும் செய்கின்ற அனைத்து உயிர்களுக்கும் அதன் பலன்களை கொடுக்கின்ற இறை நிலையாக இருப்பார்கள்.
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தை உள்\nஏனம் விளைந்து எதிரே கான் வழி தோறும்\nகூனல் மதி மண்டலத்தினில் நீர் தண்டும்\nஊனம் அறுத்து நின்ற ஒண் சுடர் ஆமே
இறைவனை அடைவதற்கு தேவையான வழிமுறையை அறிந்து கொண்டு அதை விடாமல் கடை பிடித்ததால் உண்மையான ஞானம் உருவாகி மேல் நிலைக்கு எழுந்து இருக்கின்ற ஒரு ஞானியின் சிந்தைனைக்கு உள்ளே இன்னமும் இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆணவம் கன்மம் முதலிய குற்றங்கள் பிறவியின் காரணத்தினால் விளைந்து அவர் எதிர்கொள்கின்ற வாழ்க்கையை காட்டு வழி போல முழுவதும் கடினமாக வைத்து இருக்கும். அப்போது அவர் பெற்ற ஞானத்தின் பயனால் அவரது கடினமான வாழ்க்கையை மாற்றி அறிவு ஞானமாக இருக்கின்ற மண்டலத்தில் அமிழ்த நீரை வைத்து இருக்கும் சுழுமுனை நாடியின் வழியாக அமிழ்தத்தை ஊறச் செய்து இறைவனை அவர் அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்து மலங்களையும் அதன் மூலம் நீக்கி விட்டு நிலைபெற்று நின்று எப்போதும் அவரோடு சேர்ந்தே இருக்கின்ற இறைவனின் ஜோதி வடிவமாகவே அவரையும் ஆக்கி விடும்.
அறிவும் அடக்கமும் அன்பின் உடனே\nபிறியாத நகர் மன்னும் பேர் அருள் ஆளன்\nகுறியும் குணமும் குரை கழல் நீங்காத\nநெறி அறிவார்க்கு இது நீர் தோணி ஆமே
உண்மையான அறிவும் பணிவுடைய எண்ணமும் இறைவன் மேல் கொண்ட அன்பும் அதனுடனே அடியவர்களை விட்டு என்றும் பிரியாமல் தில்லை சிற்றம்பலத்தில் நிலை பெற்ற திருநடனம் புரிகின்ற மிகப் பெரும் அருளை வழங்குவபனாகிய இறைவனை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு இருக்கின்ற நல்ல குணமும் பேரழகு வாய்ந்த அவனின் திருவடிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கின்ற மனதும் ஆகிய இவை அனைத்தையும் இறைவனை அடைவதற்கான வழியாக அறிந்து கொண்டவர்களுக்கு இந்த வழிமுறையே பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவும் படகாக இருக்கும்.
இருக்கும் சேய் இடம் பிரமமும் ஆகும்\nவருக்கும் சராசரம் ஆகும் உலகம்\nதருக்கிய ஆசாரம் எல்லாம் தகுமே\nதிருக்கம் இல் ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்கே
இறைவனின் பிள்ளைகளாகிய ஞானிகளுக்கு அவர்கள் இருக்கின்ற இடமே வீடுபேறாக ஆகி விடும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருகின்ற அசையும் பொருளும் அசையா பொருளுமாக இருக்கின்ற இந்த உலகமே அவர் கடைபிடித்து வருகின்ற ஒழுக்கங்கள் அனைத்திற்கும் தகுதியான படி அமைந்து விடும். இது யாருக்கு என்றால் ஒரு பிழையும் இல்லாத உன்னதமான ஞானத்தை தமக்குள்ளே ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்களாகிய ஞானிகளுக்கே ஆகும்.
தன் பால் உலகும் தனக்கு அருள் ஆவதும்\nஅன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன்\nஎன்பார்கள் ஞானமும் எய்தும் சிவ யோகமும்\nஇன் பாலின் நேயமும் பெற்றிடும் தானே
தாம் சார்ந்து இருக்கின்ற உலகமும் அதில் நிகழ்கின்ற அனைத்தும் தமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று எடுத்துக் கொள்வதும் தம் மேல் கொண்ட அன்பினால் தமக்கு இறைவன் கொடுக்கின்ற அருளாகவே அனைத்தும் நிகழ்வதும் அதை நிகழ்த்துபவனாகவும் இறைவனே இருக்கின்றான் என்று ஞானிகள் கூறுவார்கள். இந்த ஞானிகளே இறையருளால் ஞானமும் பெற்று சிவத்தை அறியும் யோகமும் பெற்று இனிமையான பாலைப் போல இறைவனோடு அவர்கள் கொண்ட தூய்மையான அன்பினால் பேரின்பத்தையும் பெற்று இருக்கின்றார்கள்.
சத்தமும் சத்த மன்னும் தகு மனதும்\nஉய்த்த உணர்வும் உணர்ந்தும் கரந்தையும்\nசித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும்\nசத்தம் கடந்தவர் பெற்ற சன் மார்கமே
ஞானத்தை பெறுகின்ற . மூல சத்தமும், அந்த சத்தம் நிலை பெற்று இருப்பதற்கு தகுதியான மனமும், அந்த மனதால் கிடைக்கப் பெற்ற . உண்மை உணர்வும், அதை உணர்ந்து கொண்டதால் அதற்கு காரணமாக இருப்பவர் என்று தெரிந்து கொண்ட . குருவும், சித்தம் என்று அழைக்கப் படுகின்ற இந்த மூன்றையும் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற செயலும், ஆகிய இவை அனைத்தும் சத்தங்களை கடந்து அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனை அறிந்து கொண்ட ஞானியர்கள் பெற்ற உண்மை வழியாகும்.
ஞானத்தின் மிக்க அறி நெறி நாட்டு இல்லை\nஞானத்தின் மிக்க சமையமும் நன்று அன்று\nஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்கா ஆல்\nஞானத்தின் மிக்கார் நரரில் மிக்காரே
ஞானத்தை விட மேலானதாக அறியப் படுகின்ற நெறி முறைகள் என்று எதுவும் எந்த நாட்டிலும் இல்லை. ஞானத்தை மேலானது என்று எடுத்துக் கொள்ளாத எந்த சமயமும் நன்மையானது இல்லை. ஞானத்தை விட்டு விட்டு இருக்கின்ற எந்த வழிமுறையும் நன்மையான முக்தி நிலையை கொடுக்காது. ஆதலால், ஞானத்தில் மிகவும் மேன்மை பெற்றவர்களே மனிதர்களில் மிகவும் மேன்மையானவர் ஆவார்கள்.
யோக சமையமே யோகம் பல உன்னல்\nயோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்\nயோக நிர்வாணமே உற்ற பரா உதயம்\nயோக அபிடேகமே ஒண் சத்தி உற்றலே
யோகத்தில் சமயம் எனப்படுகின்ற சரியை என்பது யோகத்தில் உள்ள பல விதமான நெறிமுறைகளை உள் வாங்கிக் கொண்டு அதை தவறாமல் கடைபிடித்தல் ஆகும். யோகத்தில் விசேடம் எனப்படுகின்ற கிரியை என்பது எட்டு அங்கங்களைக் கொண்டு இருக்கின்ற அட்டாங்க யோகம் ஆகும். யோகத்தில் நிர்வாணம் எனப்படுகின்ற யோகம் என்பது தமக்கு கிடைக்கப் பெற்ற அசையாத மனதோடு எண்ணங்கள் அற்ற நிலை தோன்றுவது ஆகும். யோகத்தில் அபிடேகம் எனப்படுகின்ற ஞானம் என்பது தம்மோடு ஒன்றாக கலந்து இருக்கின்ற இறை சக்தியை உணர்வது ஆகும்.
யோகிக்கும் யோக ஆதி மூன்று உளது ஒன்று உற்றோர்\nஆக தகு கிரியை ஆதி சரிதை ஆதி\nயாகத்தை விட்ட சரிதை ஒன்று ஒன்று உள\nஆகி தன் பத்தி உள் அன்பு வைத்தேனே
யோகத்தை புரிகின்ற யோகிக்கும் யோக நெறிமுறைக்கும் மூலமாக இருக்கின்ற மூன்று விதமான வழிமுறைகள் உள்ளது. இவற்றோடு ஒன்றி யோக முறையை கடை பிடிக்கின்ற யோகியர்கள் யோகியாக ஆகுவதற்கு தகுந்த கிரியைகள் மற்றும் அவற்றின் மூல முறைகள் சரியைகள் மற்றும் அவற்றின் மூல முறைகள் யாகம் செய்வதை தவிர மற்ற அனைத்து செயல்களும் அடங்கிய சரியை முறைகள் என்று ஒவ்வொன்றாக உள்ள மூன்று விதமான முறைகளையும் தமக்கு ஏற்ற வழிமுறைகளாக எடுத்துக் கொண்டு அதன் வழியே புரிகின்ற யோகத்தில் தாம் கொண்ட பக்திக்கு உள்ளேயே இறைவன் மேல் உண்மையான அன்பை வைத்து இருப்பார்கள்.
ஒத்த செங் கோலார் உலப்பு இலி மாதவர்\nஎத்தனை ஆயிரம் வீழ்ந்தது என்று எண் இலீர்\nசித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்\nஅத்தன் இவன் என்றே அன்பு உறுவார்களே
ஒன்றாக இருக்கும் செம்மையான கோலைப் போல வீற்றிருந்து அழிவு இல்லாத மாபெரும் தவத்தை புரிந்தவர்களில் எத்தனையோ ஆயிரம் பேர்கள் அதை தொடராமல் விட்டு விட்டதால் வீழ்ந்து போனவர்கள் என்று எண்ணிக்கை இல்லாமல் இருக்கின்றார்கள். அப்படி விட்டு விடாமல் தொடர்ந்து மாபெரும் தவத்தை புரிகின்றவர்களை சித்தர்களும் தேவர்களும் மும்மூர்த்திகளும் பெருமையுடன் எங்களின் அப்பனான இறைவன் இவனே என்று கூறி அவரோடு அன்பு கொண்டு இருப்பார்கள்.
பேணி பிறவா உலகு அருள் செய்திடும்\nகாணில் தனது கலவி உளே நிற்கும்\nநாணில் நரக நெறிக்கே வழி செய்யும்\nஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே
யோகத்தை அசையாத மனதுடன் இடைவிடாது முறைப்படி கடைபிடித்து வந்தால் இனி பிறவி எடுக்காத நிலையை இந்த உலகத்திலேயே இறையருள் கொடுத்து விடும். அந்த இறை சக்தியை தமக்குள் தரிசித்தால் தம்முடைய ஆன்மாவோடு ஒன்றாக கலந்து உள்ளே வீற்றிருக்கும் அந்த சக்தியை அறிந்து கொள்ளலாம். அப்படி இறையோடு கலந்து இருக்கின்ற நிலையில் இருப்பதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு விலகி நின்றால் மனமானது ஐம்புலன்களின் வழியே ஆசைகளின் பின்னால் செல்லுகின்ற தவறான வழியையே கொடுக்கும். இறையோடு கலந்து இருக்கின்ற நிலையிலேயே வெட்கப் படாமல் தொடர்ந்து இருந்தால் உடலுக்குள் இருக்கின்ற மலங்களை சுட்டெரிக்கின்ற மூலாக்கினியாக இருக்கின்ற உத்தமனாகிய இறைவனாகவே தாமும் ஆகிவிடுவார்கள்.
விரும்பி நின்றே செய்யில் மெய் தவர் ஆகும்\nவிரும்பி நின்றே செய்யில் மெய் உணர்வு ஆகும்\nவிரும்பி நின்றே செய்யில் மெய் தவம் ஆகும்\nவிரும்பி நின்றே செய்யில் விண்ணவன் ஆகுமே
எழுத்துக்களும் பாடல்களும் அவை அடங்கிய அறுபத்து நான்கு கலைகளும் ஆகிய எதை செய்தாலும் இறைவனை அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் அசையாத மனதுடன் நின்று செய்கின்றவர்களே உண்மையான தவத்தை புரிகின்றவர்கள் ஆவார்கள். அந்த செயலால் கிடைக்கப் பெறுவதே மாயை நீங்கிய உண்மையான உணர்வு நிலை ஆகும். அப்படி அசையாத மனதுடன் செய்வதே உண்மையான தவ முறை ஆகும். அந்த தவத்தை முறையாக செய்கின்றவர்கள் விண்ணுலகத் தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
எழுத்தோடு பாடலும் எண் எண் கலையும்\nபழி தலை பாச பிறவியும் நீங்கார்\nவழி தலை சோமனோடு அங்கி அருக்கன்\nவழி தலை செய்யும் வகை உணர்ந்தேனே
அசையாத மனதுடன் செய்யாமல் அலைகின்ற மனதுடன் செய்யப்படுகின்ற எழுதப் பட்ட எழுத்துக்களும் அவற்றோடு சேர்ந்து பாடுகின்ற பாடல்களும் இவற்றை கொண்டு இருக்கும் அறுபத்து நான்கு கலைகளும் ஆகியவற்றால் இறைவனை அடையாமல் வாழ்க்கையை வீணடிக்கின்ற பழிக்கு தலைமையாக இருக்கின்ற பாசத்தையும் அதனால் எடுக்கின்ற பிறவிகளையும் ஒருவரால் நீக்கி விட முடியாது. பாசத்தையும் பிறவியையும் நீக்குகின்ற வழிக்கு தலைமையாக இருக்கின்ற சந்திர கலையோடு அக்கினி கலையையும் சூரிய கலையையும் சேர்த்து பயன்படுத்துகின்ற வழிமுறைக்கு தலைமையாக இருக்கின்ற யோகத்தை அசையாத மனதுடன் செய்கின்ற வகைகளை எமக்குள் செய்த யோகத்தினால் யாம் உணர்ந்து கொண்டோம்.
உய்ந்தனம் என்றீர் உறு பொருள் காண்கிலீர்\nகந்த மலரில் கரக்கின்ற நந்தியை\nசிந்தை உறவே தெளிந்து இருள் நீக்கினால்\nமுந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே
முக்திக்கான ஞானத்தை பெற்று விட்டோம் என்று கூறுகின்றீர்கள் உங்களுக்கு உள்ளேயே இருக்கின்ற பரம்பொருளை கண்டு உணராமல் இருக்கின்றீர்கள். நறுமணம் மலருக்குள் மறைந்து இருப்பது போல ஜீவாத்மாவிற்குள் மறைந்து இருக்கின்ற குருநாதனாகிய இறைவனை சிந்தை முழுவதும் அவன் மேல் வைத்து யோகம் செய்து தமக்குள் அவனை அறிந்து கொண்டு தெளிவு பெற்று அதன் பயனால் மும்மலங்களாகிய இருளை நீக்கி விட்டால் முதன் முதலில் இறைவனிடமிருந்து பிரிந்து வந்து பிறவி எடுப்பதற்கு மூல காரணமாக இருக்கின்ற ஆசைகள் நீங்கப் பெற்று இனி பிறவியே இல்லாத நிலையை அடையலாம்.
பூவினில் கந்தம் பொருந்திய ஆறு போல்\nசீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது\nஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு\nநாவி அணைந்த நடு தறி ஆமே
மலராத பூவிற்குள்ளும் நறுமணம் கலந்து இருக்கின்ற முறையை போலவே ஜீவாத்மாவிற்கு உள்ளே சிவம் எனும் பரம் பொருளானது கலந்து இருக்கின்றது. பூவானது மலர்ந்த பிறகு அதனது நறுமணம் வெளிப்படுவது போலவே வரைந்து வைத்த ஓவியம் போல எதனாலும் அசையாமல் யோகத்தில் இருந்து இந்த முறையை தமக்குள்ளே உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு, கஸ்தூரியோடு சேர்ந்து இருக்கும் நறுமணம் போல தரையில் நடப்பட்ட கழியைப் போல அசையாமல் இருக்கின்ற யோகியர்களின் பக்குவப்பட்ட ஆன்மாவிற்குள் சேர்ந்து இருக்கின்ற சிவம் வெளிப்படும்.
ஊழி தோறும் ஊழி உணர்ந்தவர்க்கு அல்லது\nஊழி தோறும் ஊழி உணரவும் தான் ஒட்டார்\nஆழி அமரும் அரி அயன் என்று உளோர்\nஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே
ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை யோகத்தின் வழியால் சென்று தமக்குள் உணர்ந்தவர்களை தவிர வேறு யாராலும் உணர இயலாது. ஊழிக்காலம் ஒவ்வொன்றிலும் ஊழியாக இருந்து அனைத்தையும் அழித்து மீண்டும் உருவாக்குகின்ற இறைவனை தமக்குள் உணர்ந்து கொண்ட யோகியர்கள் அந்த ஊழிக்காலத்தோடு தானும் ஒட்டாமல் விலகி இறைவனை மட்டுமே சார்ந்து இருப்பார்கள். பாற் கடலில் பள்ளி கொண்டு அமர்ந்து இருக்கும் திருமால் அவரது தொப்புள் கொடியில் இருக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் என்று இருக்கின்ற தெய்வங்களும் ஊழிக்காலத்தோடு ஒட்டாமல் இருக்கின்றார்கள். ஊழிக்காலம் எவ்வளவுதான் இவர்களை அழிக்க முயற்சி செய்தாலும் அதனால் அழிக்க முடியாத ஒரு மாபெரும் உயரத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கின்ற அரனாக இறைவன் இருக்கின்றான்.
நெறி வழியே சென்று நேர்மையில் ஒன்றி\nதறி இருந்தால் போல தம்மை இருத்தி\nசொறியினும் தாக்கினும் துண் என்று உணரா\nகுறி அறிவாளர்கு கூடலும் ஆமே
இறைவனை அடைவதற்கு என்று குருநாதர் அருளிய நெறிமுறைகளின் வழியாகவே மனதை செலுத்தி அந்த வழிமுறையில் சிறிது அளவும் குறை இல்லாமல் முறைப்படி செய்து அதிலேயே மனதை ஒன்றி வைத்து தரையில் ஊன்றி வைத்த கழி அசையாமல் இருப்பதைப் போலவே தாமும் எதனாலும் அசையாமல் இருந்து, மழை பொழிந்தாலும் காற்று அடித்தாலும் அதனால் சிறிதும் அசையாத கழியைப் போலவே தம்மை சுற்றி எது நடந்தாலும் அதனால் பயம் என்ற உணர்வே சிறிது அளவும் இல்லாமல் இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவனை தமக்குள் அறிந்து தெளிந்தவர்களுக்கு இறைவனோடு ஒன்றாக கூடுவது இயலும்.
அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்\nசெம் பொன் செய் மேனி கமலத் திருவடி\nமுன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்\nஎன்பின் உள் சோதியில் இங்கு நின்றானே
இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பினால் உருகுபவனும் தினந்தோறும் தாம் செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும் இறைவனுக்காகவே செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்பவனும் தூய்மையான பசும் பொன்னால் செய்யப்பட்டது போல பிரகாசிக்கின்ற திருமேனியையும் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளையும் கொண்டு தமக்குள் இருக்கும் சோதி வடிவான இறைவனாகவே தமக்கு முன்பு நிற்கின்றவர்கள் அனைவரையும் பார்ப்பவனும் அவர்கள் சொல்லுகின்ற அனைத்துமே தமக்கு இறைவன் கொடுத்த அருளாக எடுத்துக் கொள்கின்றவனும் ஆகிய பக்தனின் எலும்புகளால் மூடியிருக்கும் உடலுக்கு உள்ளே தங்கம் போல பிரகாசிக்கின்ற சோதியாக பக்தன் இருக்கின்ற இடத்திலேயே நிற்கின்றான் இறைவன்.
பத்தன் கிரிகை சரிதை பவில் உற்று\nசுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்\nஉய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்\nசித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே
பக்தியின் முறையை கடைபிடிக்கின்ற பக்தன் கிரியையும் சரியையும் முறைப்படி கற்று அதனை கடைபிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது இறைவனின் தூய்மையான அருளால் யோகம் கிடைக்கப் பெறும். அப்படி தமக்கு கிடைத்த மேன்மையான யோக வழியை குறிக்கோளாகக் கொண்டு ஒரு குற்றமும் இல்லாமல் செய்யும் போது அதன் பயனால் தமக்குள் உண்மை ஞானத்தை உணரலாம். அப்படி உணர்ந்த உண்மை ஞானத்தின் வழியாக சித்தம் தெளிவு பெற்று குருவாக இருக்கின்ற இறைவனின் அருளால் அவர் தமது சித்தம் சிவமாகவே ஆகி விடும்.
இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்\nஅது பணி செய்கின்ற வாள் அது கூறின்\nஇது பணி மானிடர் செய் பணி ஈசன்\nபதி பணி செய்வது பத்திமை காணே
கிரியை வழிமுறையை கடைபிடிக்கின்றவர்கள் இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே என்பதை அறிந்து கொண்டு அதை பணிந்து வணங்கி எட்டு திசைகளிலும் இருக்கின்ற மண்டலங்கள் அனைத்திலும் நிகழ்கின்ற அனைத்து விதமான செயல்களையும் செய்கின்ற ஒளியாக இருக்கின்றதும் அதுவே என்பதை எடுத்துச் சொன்னால், இந்த உலகத்தில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் என்று மனிதர்களால் செய்யப் படுகின்ற அனைத்து செயல்களும் இறைவனே செய்கின்றான் என்பதை அறிந்து கொண்டு அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற இறைவனுக்கே தாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் செய்வதாக எண்ணிக் கொண்டு அவற்றை அன்போடு செய்வது கிரியை வழியில் செல்லுகின்ற பக்தியின் முறைமை என்று கண்டு கொள்ளுங்கள்.
கோன கன்று ஆயே குரை கழல் ஏத்துமின்\nஞான கன்று ஆயே நடுவே உமிழ் தரும்\nவான கன்று ஆகிய வானவர் கை தொழும்\nஆனை கன்று ஈசன் அருள் பள்ளம் ஆமே
நேர் வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதி வழியே செல்லுகின்ற பிள்ளைகளாக இருந்தாலும் ஒலி பொருந்திய சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளை போற்றி வணங்கிக் கொண்டே இருங்கள். அப்படி வணங்கிக் கொண்டே இருந்தால் அவனது அருளால் ஞானம் பெற்ற பிள்ளைகளாக ஆகி தமக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் இருந்து அமிழ்தம் சுரக்கும் படி கொடுக்கும். அந்த அமிழ்தத்தை அருந்திக் கொண்டு இருந்தால் வானத்தில் இருக்கும் பிள்ளைகளாகிய தேவர்களும் சென்று கைகூப்பி தொழுகின்ற ஆன்மாவைக் கொண்டு இருக்கின்ற பிள்ளைகளாகிய உயிர்களுக்கு எல்லாம் அதிபதியாகிய இறைவனின் திருவருளை நிரம்புகின்ற பாத்திரமாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.
கான் உறு கோடி கடி கமழ் சந்தனம்\nவான் உறு மா மலர் இட்டு வணங்கினும்\nஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது\nதேன் அமர் பூம் கழல் சேர ஒண்ணாதே
காட்டில் இருக்கும் மரங்களை ஊடுறுவிச் சென்று கோடி காத தூரம் பரவுகின்ற நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை பூசி வழிபட்டாலும் வானத்தை ஊடுறுவும் அளவிற்கு மிகப் பெரிய அளவு மலர்களால் கட்டிய மாலையை சூட்டி வழிபட்டாலும், தான் எனும் எண்ணத்தையும் உடல் சார்ந்த பற்றுக்களையும் நீக்கி விட்டு இறைவனை உணர்ந்து வழிபடுபவர்களுக்கு மட்டுமின்றி சுவையான தேனை போன்ற பேரின்பத்தை கொண்டு இருப்பதால் வண்டுகள் போன்ற அடியவர்கள் விரும்பி வந்து சரணடைகின்ற மென்மையான பூவைப் போன்ற இறைவனின் திருவடிகளை சென்று சேரும் பெரும் பேறு வேறு யாருக்கும் கிடைக்காது.
பத்து திசைக்கும் பரம் ஒரு தெய்வம் உண்டு\nஏத்துக்கு இலர் இல்லை என பத மலர்க்கு\nஒத்து திரு அடி நீழல் சரண் என\nதத்தும் வினை கடல் சாராது காணுமே
பத்து விதமான திசைகளுக்கும் பரம்பொருளாக இருக்கின்ற ஒரு தெய்வம் இருக்கின்றது. அந்த தெய்வத்தை எந்த விதத்திலும் போற்றி வணங்குவதற்கு இயலாதவர்கள் என்று எவரும் இல்லை (அனைவராலும் இயலும்). ஆகவே தூய்மையான தாமரை மலர் போன்று இருக்கின்ற அவனது மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய திருவடிகளின் அமைதியையும் குளிர்ச்சியையும் தருகின்ற நிழலே சரணாகதி என்று சரணடைந்தால் மாயையில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்ற வினைகளால் சூழ்ந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையை சார்ந்து இல்லாமல் அந்த இறை சக்தியை தமக்குள் தரிசிக்கலாம்.
சரிதை ஆதி நான்கும் தகு ஞானம் நான்கும்\nவிரிவு ஆன வேத அந்தம் சித்த அந்தம் ஆறும்\nபொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து\nமருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே
இறைவனை அடைவதற்கான சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான வழிமுறைகளுக்கும் அவற்றை செய்வதற்கு தேவையான அறிவாகிய நான்கு விதமான ஞானங்களுக்கும் அந்த ஞானங்களின் விரிவாக இருக்கின்ற வேதத்தின் எல்லையாக இருக்கின்ற காபிலம் காணாதம் பாதஞ்சலம் அட்சபாதம் வியாசம் ஜைமினியம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் உண்மைப் பொருளாக இருக்கின்ற குருநாதனாகிய இறைவன் தம்மை அடையும் இந்த வழிமுறைகளை அறியாமல் மாயையில் சிக்கி சுழன்று கொண்டு இருக்கின்ற மனிதர்களை தான் வீற்றிருக்கும் தங்கம் போன்ற தில்லை சிற்றம்பலத்திற்குள் நுழைய வைத்து தம்மை வணங்கும் படி செய்து அவர்களை ஆட்கொள்கிறான்.
கிரியையில் யோகம் கிளர் ஞான பூசை\nஅரிய சிவன் உருவம் ஆம் அரூபம்\nதெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை\nஉரியன நேயத்து உயர் பூசை ஆமே
கிரியையில் வெளிப்புறமாக செய்யப்படும் பூசைகளை எண்ணத்தால் யோகத்தில் செய்து தமக்குள் இருக்கும் அறிவை கிளர்ச்சி பெற்று எழுப்பும் உயர்வான ஞான பூசையாகும். அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான சிவ பரம்பொருளின் உண்மை உருவமாக இருக்கின்ற உருவமே இல்லாத அரூப நிலையை அறிந்து கொள்ளும் பக்குவத்தை பெறலாம். அந்த பக்குவத்தில் தேர்ச்சி பெற்ற பூசைக்கு ஏற்றதாக இருப்பது இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும் உயர்வான மானசீக பூசையே ஆகும்.
சார்ந்த மெய் ஞானத்தோர் தான் அவன் ஆய் அற்றோர்\nசேர்ந்த எண் யோகத்தர் சித்தர் சமாதியோர்\nஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்\nநேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோர்களே
இறைவனை சார்ந்து இருந்து உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் தாமே இறைவனாக ஆகி தான் எனும் தன்மை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் எண்ணங்களால் யோகத்தில் மேல் நிலை பெற்ற யோகியர்கள் சித்தர்களாக ஆகி சமாதி நிலையில் இருக்கின்றார்கள். இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் படியே கிரியையை செய்கின்றவர்கள் அதற்காக செய்கின்ற பூசைகளை முறைப்படி தவறாமல் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இறைவனை அடைவதையே குறிக்கோளாக கொண்டு சரியையை செய்கின்றவர்கள் நீண்ட காலம் இந்த உலகத்திலேயே இருக்கின்றார்கள்.
பக்தர் சரியை படுவார் கிரியையோர்\nஅத் தகு கொண்டார் அருள் வேடத்து ஆகுவோர்\nசுத்த வியம் ஆதி சாக்கரத்து தூ யோகர்\nசித்தர் சிவ ஞானம் சென்று எய்துவோர்களே
இறைவனை அடையும் வழிமுறையான சரியையை மேற் கொண்டு கிரியைகளை செய்கின்றவர்களே பக்தர்கள் ஆவார்கள். அந்த கிரியைகளின் செயலின் தன்மையையே தாமும் அடைந்து அதன் பயனால் அருள் வடிவத்தில் இறை தன்மையாகவே அவர்கள் ஆகின்றார்கள். அதனால் மும்மலங்களும் நீங்கி சுத்தமாகிய தமது உடலுக்குள்ளே ஆதியிலிருந்தே இருக்கின்ற ஆன்மாவானது எது என்பதை உணர்ந்து கொண்டு தூய்மையான யோகிகள் ஆகின்றார்கள். அதன் பிறகு பரம்பொருளான சிவத்தின் உண்மை ஞானத்தை தமக்குள்ளே சென்று உணர்ந்து அடைந்து சித்தர்கள் ஆகின்றார்கள்.
நாடும் நகரமும் நல் திரு கோயிலும்\nதேடி திரிந்து சிவ பெருமான் என்று\nபாடுமின் பாடி பணிமின் பணிந்த பின்\nகூடிய நெஞ்சத்து கோயில் ஆய் கொள்வனே
உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் அதிலுள்ள நகரங்களிலும் உயிர்களின் நன்மைக்காக அமைக்கப் பட்டுள்ள இறைவன் வீற்றிருக்கும் கோயில்களை தேடி அலைந்து திரிந்து கண்டு பிடித்து அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியை சிவம் எனும் பரம்பொருளாகவே எண்ணி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி கொண்டே இறைவனைப் பணிந்து தொழுது வணங்குங்கள். அவ்வாறு வணங்கிய பிறகு அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் வணங்கித் தொழுத பக்தர்களோடு ஒன்றாக சேர்ந்து அந்த பக்தர்களின் நெஞ்சத்தையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு அங்கே வீற்றிருக்கும்.
உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை\nஉயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை\nஉயிர் பெறும் ஆவாகனம் புற பூசை\nசெயற்கு இடை நேசம் சிவ பூசை தானே
உயிர்களுக்குள் ஆன்மாவாக இறைவன் நிற்கின்ற விதத்தை தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் ஆத்ம விசாரமாகிய (நான் யார் என்று அறிந்து கொள்வது) ஞான பூசையாகும். உயிர்களுக்குள் ஒளியாக இருக்கும் இறைவனை தமக்குள்ளே தரிசித்தல் மாபெரும் சாதனையாகிய யோக பூசையாகும். உருவச் சிலைகள் இறை சக்தியை பெறும்படி மந்திரங்கள் சொல்லி கிரியைகள் செய்து சக்தியூட்டி அந்த சிலைகளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்வது வெளிப்புற பூசையாகும். எந்தவிதமான பூசைகளை செய்தாலும் அந்த பூசைக்கான செயல்களை இறைவன் மேல் கொண்ட பேரன்போடு செய்வது மானசீகமாகிய சிவ பூசையாகும். இந்த நான்கு விதமான பூசைகளே சரியை ஆகும்.
நெரநதிடு மூலச சரிதை நெறியிதென\nறாயநதிடுங காலஙகி கஞசன மலையினமா\nனொரநதிடுங கநதுருக கெணமினகள பூதலந\nதெரநதிடுஞ சுதத சைவததுயி ராவதெ
நேர்ந்திடும் (இறைவனை சென்று அடைவதற்கு) மூல (மூலமாக இருக்கின்ற) சரியை (சரியை எனும்) நெறி (வழிமுறை) இது (இதுவே) என்று (என்று) ஆய்ந்திடும் (ஆராய்ந்து அறிந்து கொண்ட) கால் (காலத்தை வென்று) அங்கி (அதை அங்கியாக அணிந்து கொண்டு) கஞ்சன் (வெண்கலம் போன்ற உறுதியான) மலையின் (மலை எனும் பொருளில் பெயர் கொண்ட கஞ்ச மலைக்கு) மான் (பெருமை சேர்த்த காலாங்கி நாதரும்) ஓர்ந்திடும் (இதையே ஆராய்ந்து தெளிவாக உணர்ந்து கொண்ட) கந்துரு (கந்துரு நாதரும்) கேண்மின்கள் (ஆராய்ந்து உணர்ந்து கொண்ட வழிமுறையை நீங்களும் கேளுங்கள்) பூதலம் (இந்த பூமியிலேயே) தேர்ந்திடும் (இறைவனை அடைவதற்கான வழி என்று ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும்) சுத்த (சுத்த) சைவத்து (சைவம் எனும் வழிமுறைக்கு) உயிர் (உயிர் ஆதாரமாக) ஆவதே (இருப்பதே சரியை எனும் வழிமுறை ஆகும்).
சாற்ற அரிது ஆகிய தத்துவம் சித்தித்தல்\nஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்\nமேல் திகழ் ஞானம் விளக்கு ஒளி ஆய் நிற்கும்\nபார் பர சாயுச்சியம் ஆகும் பதியே
சார்ந்து நிற்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற அனைத்தும் இறைவன் ஒருவனே எனும் தத்துவம் இறையருளால் கிடைக்கப் பெற்றால் ஆசைகளை நீக்குவதற்கு மிகவும் அரியதாகிய ஐந்து புலன்களும் அடங்கி விடும். அதன் பிறகு மேலே திகழ்கின்ற உண்மை ஞானமானது இருளான வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு ஒளியை கொடுப்பது போல மாயை நீங்கிய உண்மையை விளங்க வைக்கும் ஒளியாக நிற்கும். அப்போது இந்த உலகத்திலேயே கடும் சுத்த சைவத்தை கடைபிடிக்கின்ற சைவர்கள் தாம் இருக்கின்ற இடத்திலேயே பரம்பொருளோடு எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற சாயுச்சியம் எனும் நிலை கிடைக்கப் பெறுவார்கள்.
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே\nதான் என்று நான் என்று இரண்டு இலா தற் பதம்\nதான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்\nதான் என்று நான் என்றும் சாற்றுகிலேனே
நானாகிய ஆன்மா எங்கே இருக்கின்றது என்றும் தனக்குள் இருக்கும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்றும் தேடி அலைந்து நான் இறைவனை சார்ந்து இருக்கும் போது இறைவன் என்றும் ஆன்மா என்றும் தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும் இல்லாமல் தானே அனைத்துமாய் நிற்கின்ற பரம்பொருளாகிய இறைவன் தான் என்றும் நான் என்றும் ஆகிய அனைத்தும் தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை எனக்கு தந்து அருளியதால் இனி தான் என்றும் நான் என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்.
சுத்த சிவன் உரை தான் அது உட் ஓயாமல்\nமுத்தர் பத பொருள் முத்தி வித்து ஆம் மூலம்\nஅத்தகை ஆன்மா அரனை அடைந்து அற்றால்\nசுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே
மாசு இல்லாத பரம்பொருளாகிய இறைவன் சொல்லி அருளிய போதனைகளை தமக்குள் உள்வாங்கிக் கொண்டு அவற்றையே ஓயாமல் சிந்தித்து ஆராய்ந்து இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின் பொருளும் முத்தி நிலைக்கு விதையாக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம் முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின் தன்மையை தானும் பெற்ற சாதகரின் ஆன்மாவானது இறைவனை சென்று அடைந்து அவன் அருளால் மாசு இல்லாத சிவம் எனும் பரம்பொருளாக தாமும் ஆகி இருப்பவர்களே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.
உடல் ஆன ஐந்தையும் ஓர் ஒன்று ஐந்து\nமடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவ\nபடல் ஆன கேவல பாசம் துடைத்து\nதிடம் ஆய் தனை உற்றல் சித்தாந்த மார்கமே
மனித உடலாக இருக்கின்ற ஐந்து விதமான பஞ்ச பூதங்களையும் அதை ஒன்றின் மேல் ஒன்றாக மூடி இருக்கின்ற ஐந்து வகையான கோசங்களையும் கடந்து நின்று அதையும் தாண்டி விரிந்து இருக்கின்ற சுத்த மாயையும் மற்றும் இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும் தாண்டிச் சென்று இறைவனை அடைவதற்கு தடையாக மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற பாசங்களையும் முழுவதுமாக நீக்கி விட்டு உறுதியாக தனக்குள் இருக்கும் இறைவனை மட்டுமே உற்று கவனித்த படியே இருப்பதே சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்.
வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி\nஆடம்பரம் இன்றி ஆசா பாசம் செற்று\nபாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ் பட\nசாடும் சிவ போதகர் சுத்த சைவரே
வெளிப்புற வேடங்கள் எதுவும் இன்றி உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவனின் மேல் மட்டும் எண்ணங்களை வைத்து எந்தவிதமான ஆடம்பரங்களும் இல்லாமல் ஆசைகளையும் பாசங்களையும் நீக்கி விட்டு பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாசத் தளைகளும் இறைவனிடமிருந்து ஆன்மா தனித்து இருக்கும் பசு தத்துவமும் அழிந்து போகும் படி செய்து இறைவனை மட்டுமே சார்ந்து இருந்து இறைவன் அருளிய போதனைகளை முறைப்படி கடை பிடிப்பவரே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.
ஒன்றும் இரண்டும் இலதும் ஆய் ஒன்று ஆக\nநின்று சமைய நிராகார நீங்கியே\nநின்று பராபரை நேயத்தை பாதத்தால்\nசென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே
நான் என்ற ஒன்றை நினைப்பதும் இல்லாமல் நானும் இறைவனும் என்று இரண்டாக நினைப்பதும் இல்லாமல் நானும் இறைவனும் வேறு வேறு என்று நினைப்பதும் இல்லாமல் அனைத்தும் இறைவன் ஒருவன் மட்டுமே எனும் எண்ணத்தில் நின்று உலக நியதிகளில் பல விதமாக இறைவன் என்று உருவாக்கி வைத்து இருக்கும் உருவங்களை எல்லாம் நீக்கி விட்டு உருவமே இல்லாத அன்பில் நின்று பரம்பொருளாகிய இறைவனின் பேரன்பின் வடிவத்தை இறைவனது திருவடியின் அருளினால் சென்று அடைந்து அன்பே சிவமாக ஆகி விடுவதும் சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பேரறிவை பெறுவதுமே மார்க்க சைவத்தின் வழிமுறைகள் ஆகும்.
விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள்\nகண்ணினை சென்று அணுகா பல காட்சிகள்\nஎண்ணினை சென்று அணுகாமல் எண்ணப்படும்\nஅண்ணலை சென்று அணுகா பசு பாசமே
பரந்து விரிந்து இருக்கின்ற வானத்தில் எவ்வளவுதான் உயரே மேகங்கள் சென்றாலும் அவை விண்ணுலகத்தை சென்று அடைவதில்லை. பல விதமான காட்சிகளைக் கண்டாலும் கண்களில் அந்தக் காட்சிகள் வந்து ஒட்டிக் கொள்வதில்லை. அது போலவே உலகத்தில் அறிந்தவற்றையே எண்ணிக் கொண்டு இருக்கின்ற எண்ணங்களால் உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனை சென்று அடைய முடியாதபடி பாசமானது ஆன்மாவை தடுத்துக் கொண்டு இருக்கின்றது. ஆகவே இறைவனை அடைய வேண்டுமென்றால் மார்க்க சைவத்தின் வழியைக் கடை பிடித்து அதன் பயனால் பாசத்தளை நீங்கி உண்மை ஞானமாக இருக்கின்ற இறைவனை அடையலாம்.
வேத அந்தம் கண்டோர் பரம வித்தியாதரர்\nநாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்\nவேத அந்தம் இல்லாத சித்த அந்தம் கண்டு உளோர்\nசாதரணம் அன்ன சைவர் உபாயமே
வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை கண்டு அறிந்து கொண்டவர்கள் மிகவும் உன்னதமான நிலையில் மெய் ஞானம் உலக ஞானம் ஆகிய அனைத்தையும் கற்று அறிந்தவர்கள் ஆவார்கள். நாதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை கண்டு அறிந்து கொண்டவர்கள் சித்தத்தில் நடுக்கம் சிறிதும் இல்லாமல் எப்போதும் இறைவனையே சிந்தித்து கொண்டு இருக்கும் யோகிகள் ஆவார்கள். இப்படி இல்லாமல் வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்து கொள்ளாத வெறும் உலக அறிவுக்கு எல்லையைக் கண்டு இருக்கின்ற சைவர்கள் சாதாரணம் என்று சொல்லப்படும் பொதுவான சைவர்களின் வழியையே கடை பிடிக்கின்றவர்கள் ஆவார்கள்.
மாறாத ஞான மதி பர மாயோகம்\nதேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி\nபேறு ஆன பாவனை பேணி நெறி நிற்றல்\nகூறு ஆகும் ஞான சரிதை குறிப்பிலே
எந்தக் காலத்திலும் மாறாத உண்மையான ஞானத்தை தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து அந்த அறிவால் பரம் பொருளை அடையும் மாபெரும் யோகத்தை செய்வதும் அதன் பயனால் தெளிவாக இறையை உணர்ந்து கொள்ளாத சிந்தனையை தெளிவு படுத்தி சிவம் எனும் பேரன்பாக ஆக்குவதும் அதன் பயனால் கிடைப்பதற்கு மிகவும் அரிய பேறாக இருக்கும் அருள் பாவனைகளை பெற்று அவற்றை கடைபிடித்து அருள் வழியே மாறாமல் நிற்பதும் ஆகிய இந்த மூன்றும் மார்க்க சைவத்தின் ஞான வழியைக் கடைபிடிக்கும் சைவர்கள் குறிப்பாக வைத்து சாதகம் செய்கின்ற சரியை எனும் முறைக்கு அங்கங்கள் ஆகும்.
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அப்போதம்\nஆரணம் அந்தம் மதித்து ஆனந்தத்தோடு\nநேர் என ஈர் ஆறு நீதி நெடும் போகம்\nகாரணம் ஆம் சுத்த சைவர்க்கு காட்சியே
அனைத்து தத்துவங்களையும் முறைப்படி தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து உணர்ந்து ஆதியிலிருந்தே சேர்த்து வைத்து இருக்கும் மும்மலங்களங்களையும் நீக்குகின்ற இறைவன் அருளிய போதனைகளால் வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற இறைவனை தொழுது வணங்கி இறையருளால் தனக்குள் பெற்ற பேரின்பத்தில் சீராக இருக்கும் படி மொத்தம் அங்குலமும் (கழுத்துக்கு கீழே எட்டு அங்குலம் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம்) மூச்சுக்காற்றை மந்திரங்களோடு சேர்த்து சுவாசிக்கும் முறைப்படி சுவாசித்து நீண்ட காலம் சாதனை செய்கின்ற சாதகங்களுக்கு காரணமாக இருப்பது மார்க்க சைவ முறைப்படி நடக்கும் சுத்தமான சைவர்கள் தமக்குள் பரிபூரணமாக ஆராய்ந்து பெற்ற இறை காட்சியே ஆகும்.
தன்னை பரனை சதா சிவன் என்கின்ற\nமன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற\nமுன்னை பழ மலம் ஊழ் கட்டை வீட்டீனை\nஉன்ன தகும் சுத்த சைவர் உபாயமே
சாதகர் தன்னையும் பரம்பொருளாகிய இறைவனையும் சதாசிவமூர்த்தி என்று உணரப்படுகின்ற அசையும் சக்தியும் அசையா சக்தியும் சேர்ந்து செயல்படுகின்ற பதியாகிய இறையையும் பசுவாகிய ஆன்மாவையும் பாசமாகிய பற்றுக்களையும், குற்றம் இல்லாத இறைவனிடமிருந்து ஆசையினால் பிரிந்து வந்த பிறகு குற்றமடைந்து பழமையான காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற மூன்று விதமான மலங்களையும், நல் வினை தீ வினை ஆகிய இரண்டு விதமான வினைகளாலும் கட்டப் பட்டு இருக்கும் ஆன்மா வசிக்கும் வீடாகிய இந்த உடலையும் தனக்கு உள்ளேயே ஆராய்ந்து பரிபூரணமாக உணர்ந்து கொள்வதற்கு ஏதுவாக இருப்பது சுத்தமான சைவத்தை கடைபிடிக்கும் சைவர்களின் வழியாகிய மார்க்க சைவமே ஆகும்.
சத்தும் அசத்தும் தணந்து அவன் தான் ஆகி\nசித்தும் அசித்தும் தெரியா சிவ யோகம் ஆய்\nமுத்தி உள் ஆனந்த சத்தி உள் மூழ்கினார்\nசித்தியும் அங்கே சிறந்தது தானே
நிலையான ஆன்மாவும் நிலையில்லாத உடலையும் கடந்து துரியாதீத நிலையில் இருக்கின்ற சாதகர் தானே இறைவனாகி உலக அறிவாலும் அறியாமையாலும் தெரிந்து கொள்ள முடியாத சிவ யோகத்தின் வடிவமாய் முக்தி நிலைக்கு உள்ளே இருக்கின்ற பேரின்பத்தின் சக்திக்கு உள்ளே மூழ்கி இருந்து பேரறிவு ஞானத்தைப் பெற்று அந்த முக்தி நிலைக்குள் மேன்மையுடன் சிறந்து விளங்குகின்றார்.
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்\nசத்தும் அசத்தும் தணந்த பராபரை\nஉய்த்த பராபரை உள் ஆம் பராபரை\nஅத்தன் அருள் சத்தி ஆய் எங்கும் ஆயே
சுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு ஆகிய இரண்டு நிலைகளும் அசுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளும் துரியம் துரியாதீதம் ஆகிய இரண்டு நிலைகளும் கூட்டி மொத்தம் ஏழு விதமான நிலைகளையும் அனுபவிக்கும் நிலையாக இருக்கின்ற ஆன்மாவையும் நிலையற்றதாக இருக்கின்ற உடலையும் கடந்து இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற பரம்பொருளே அனைத்திற்கும் உள்ளே இருந்து இயக்கி அவற்றை மேல் நிலைக்கு கொண்டு செல்கின்ற பரம்பொருளாகும். அதுவே அப்பனாகவும் அருள் மயமாகிய சக்தியாகவும் ஆகி அனைத்துமாகவும் ஆகி இருக்கின்றது.
ஆகமம் ஒன்பான் அதில் ஆதன நால் ஏழு\nமோகம் இல் நால் ஏழு முப் பேதம் உற்று உடன்\nவேகம் இல் வேத அந்த சித்த அந்த மெய்மை ஒன்றாக\nமுடிந்தது அரும் சுத்த சைவமே
இறைவனை அடைவதற்கு வழிவகுக்கும் ஆகமங்கள் ஒன்பது வகையாகவும் அவற்றின் முழுமையான சொத்தாக ஆகமங்களாகவும் இருக்கின்றன. எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல் இந்த ஆகமங்களையும் கற்று உணர்ந்து அவற்றின் பயனால் இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற மூன்று விதமான பற்றுக்களை விட்டு விலகுவது எப்படி என்பதை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதனுடன் சேர்ந்து எந்தவிதமான எண்ணங்களும் இல்லாமல் வேதங்களுக்கு எல்லையாகவும் ஞானத்திற்கு எல்லையாகவும் இருக்கின்ற உண்மைப் பொருளாகிய இறைவனுடன் ஒன்றாக கலந்து தான் எனும் நிலை முடிந்து இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை அடைவதே கிடைப்பதற்கு மிகவும் அரிதான பெரும் பேறாகிய சுத்த சைவம் ஆகும்.
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி\nபாடு அறு வேத அந்தம் சித்த அந்தம் பாதத்தின்\nஊடு உறு ஞான உதய நுண்மை முத்தியோன்\nபாடு உறு சுத்த சைவ பத்த நித்தனே
கருவிகளின் மூலம் சாதகம் செய்து தீயவற்றை அறுக்கின்ற ஞானியாகிய சாதகர் கிளர்ந்து எழுகின்ற ஞானத்திற்கு அதிபதியாகவும், பாசமாகிய துன்பங்களை அறுக்கின்ற வேதங்களுக்கு எல்லையாகவும் சித்தங்களுக்கு எல்லையாகவும் இருக்கின்ற இறைவனின் திருவடிகளை தம்மை நாடி வரும் அடியவர்களின் மனதிற்குள் புகுத்தி ஞானத்தை உருவாக்குகின்ற நுட்பமான முக்தி நிலையில் இருப்பவராகவும், பாசமாகிய துன்பத்தை அனுபவித்தாலும் அதனால் சிறிதும் பாதிக்கப் படாமல் சுத்தமான சைவ நெறிமுறையைக் கடைபிடித்து எப்போதும் பக்தியிலேயே நிலைத்து நிற்பவராகவும் இருப்பார்.
பொன்னால் சிவ சாதனம் பூசி சாதனம்\nநன் மார்க்க சாதனம் நல ஞான சாதனம்\nதுன் மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்\nசன் மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே
இறைவனது அம்சமாக இருக்கின்ற மணிகளை (உருத்திராட்சம், துளசிமணி, ஸ்படிகம் போன்றவற்றை) தங்கத்தால் கோர்த்து செய்து அணிந்து கொண்டும் இறையருளுக்கு கருவியாக இருக்கின்ற நறுமணப் பொருள்களை (விபூதி, குங்குமம், சந்தனம், செந்தூரம், நாமம் போன்றவற்றை) பூசிக் கொண்டும் இவற்றை கருவியாக கொண்டு பூஜை எனும் சாதகத்தை செய்கின்ற வழிமுறையானது நன்மையைக் கொடுக்கும் வழிமுறையாகும். இதற்கு கருவியாக இருக்கின்ற மணிகளும் பூசிக்கொள்ளும் நறுமணப் பொருட்களும் பலவிதமான நலங்களை அறிந்து கொள்ளுகின்ற ஞானத்தை கொடுக்கின்ற கருவியாகவும் இருக்கின்றன. தீமையைக் கொடுக்கும் வழிமுறைக்கான கருவி எதுவும் நன்மையின் நெறி வழியே செல்லுகின்ற சாதகருக்கு தடையாக உருவாகாமல் இருக்கவும் இந்த கருவிகள் உதவுகின்றன. இவை அனைத்தும் சத்தியத்தின் வழிமுறையை பின்பற்றி இறைவனை அடைவதற்கு சாதகம் செய்கின்ற சுத்த சைவர்களுக்கு உதவுகின்ற கருவிகளாக இருக்கின்றன.
ஞானி புவி எழு நன் நூல் அனைத்துடன்\nமோன திசையும் முழு எண் எண் சித்தியும்\nஏனை நிலமும் எழுதா மறை ஈறும்\nகோன் ஓடு தன்னையும் காணும் குணத்தனே
சக்தி மயங்களாகிய இறையை இந்த உலகிலேயே உணர்ந்து கொண்ட ஞானியாகிய சாதகர் உலகத்திலுள்ள உயிர்கள் எழுச்சி பெற நன்மையை தருகின்ற நூல்கள் அனைத்தையும் அறிந்து கொள்பவராகவும் பேச்சும் அசைவும் இல்லாத மோன நிலையில் இருந்தாலும் அனைத்து திசைகளிலும் நிகழும் அனைத்தையும் அறிந்தவராகவும் தமது எண்ணம் முழுவதிலும் இறைவனையே வைத்து எட்டு விதமான சித்திகளையும் பெற்றவராகவும் இந்த உலகம் தாண்டி இருக்கின்ற அனைத்து உலகங்களிலுள்ள உயிர்களும் அடைய வேண்டிய இறைவனை வெளிப்படையாக எழுதாமல் உட்பொருளாக மறைத்து வைத்து இருக்கும் வேதங்களையும் அதன் எல்லையாக இருக்கின்ற இறைவனையும் உணர்ந்தவராகவும் அனைத்தையும் ஆளுகின்ற அரசனாக இருக்கின்ற இறைவனோடு தன்னையும் சரிசமமாக பாவிக்கும் குணத்தை கொண்டவராகவும் இருப்பார்.
கண்டங்கள் ஒன்பதும் கண்டு அவர் கண்டனர்\nகண்டங்கள் ஒன்பதும் கண்டு ஆய் அரும் பொருள்\nகண்டங்கள் ஒன்பதும் கண்டு அவ கண்டம் ஆம்\nகண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே
தமக்குள்ளும் தம்மைத் தாண்டியும் இருக்கின்ற . மூலாதாரம் . சுவாதிஷ்டானம் . மணிப்பூரகம் . அநாகதம் . விசுத்தி . ஆக்ஞா . சகஸ்ரதளம் . துவாதசாந்த வெளி . பரவெளி எனும் சந்திர மண்டலம் ஆகிய ஒன்பது சக்தி மயங்களையும் பயிற்சியின் படி சாதகம் செய்து கண்டு உணர்ந்து கொண்டவர்களே உண்மையான சக்தி மயங்களை தரிசித்தவர்கள் ஆவார்கள். இவற்றை கண்டு உணர்ந்து கொண்ட சாதகர்கள் அந்த சக்தி மயங்களே கிடைப்பதற்கு மிகவும் அரிய பரம்பொருளான இறையாக இருப்பதை அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு சாதகத்தை தொடர்ந்து செய்து அந்த சக்தி மயங்களாக இருக்கின்ற இறை சக்தியே தாமாகவும் ஆகி இருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இப்படி ஒன்பது சக்தி மயங்களாக இருக்கின்ற இறையை தரிசித்த சாதகர்களே கடுமையான சுத்த நெறியை இந்த உலகிலேயே பின்பற்றும் அசுத்த சைவர்கள் ஆவார்கள்.
காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து\nஓதும் திரு மேனி உள் கட்டு இரண்டு உடன்\nசோதனை செய்து துவா தச மார்க்கர் ஆய்\nஓதி இருப்பார் ஒரு சைவர் ஆமே
தனது காதுகளில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் தங்கத்தால் அழகாக வார்க்கப்பட்ட கடுக்கன்கள் இரண்டையும் காதோடு சேர்த்து அணிந்து கொண்டு இறைவனது திருநாமத்தை ஓதுகின்ற தமது மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய உடலுக்கு உள்ளே இறைவனது திருநாமத்தை ஓதுவதினால் உருவாகுகின்ற சக்திகளை தம்மை சுற்றியே செயல் படுத்தும் பூனூல் மற்றும் அதை மேம்படுத்தி செயல் பட வைக்கும் ருத்திராட்சம் ஆகிய இரண்டு மாலைகளையும் அணிந்து கொண்டு இவற்றின் செயல்பாடுகளை சோதனை செய்து கொண்டே கழுத்துக்கு கீழே எட்டு அங்குலமும் கழுத்துக்கு மேலே நான்கு அங்குலம் சுற்றிக் கொண்டு இருக்கின்ற மூச்சுக்காற்றுடன் சேர்ந்து அசபையாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே அது சரியாக இயங்குகின்றதா என்பதை ஆராயந்து செயல் படுத்துபவர்களே அசுத்த சைவம் வழிமுறையை கடைபிடிக்கும் சைவர்கள் ஆவார்கள்.
இணை ஆர் திரு அடி ஏத்தும் சீர் அங்கத்து\nஇணை ஆர் இணை குழை ஈர் அணை முத்திரை\nகுணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது\nஅணைவு ஆம் சரியை கிரியை இன் ஆர்க்கே
இறைவனுக்கு இணையாக பேரழகு கொண்ட மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய திருவடிகளை போற்றி வணங்கும் சாதகர்கள் சீரும் சிறப்புமாக ஒழுக்கத்துடன் பராமரிக்கும் தமது உடலில் இறைவனுக்கு இணையாக அழகாக இருக்கின்ற இரண்டு குண்டலங்களை தமது காதுகளில் அணிந்து கொண்டும் இறைவனோடு எப்போதும் சேர்த்தே வைத்து இருக்கின்ற இறைவனது இரண்டு சின்னங்களாகிய நந்தியும் சூலமும் வைத்தும் முறையான கயிற்றில் அழகாக கோர்க்கப்பட்டு இறைவனுக்கு இணையாக இருக்கின்ற ருத்திராட்ச மாலையை கழுத்தில் அணிந்து கொண்டும் இவை அனைத்தும் இறைவனுக்கு இணையாக இருக்கின்றது என்ற உறுதியான எண்ணத்தில் சிறிதளவும் குறைவு இல்லாமல் எப்போதும் தம்மோடு சேர்த்தே வைத்துக் கொண்டு உடலால் பூஜித்தும் உடலாலும் மனதாலும் வழிபட்டும் இருக்கின்ற சாதகர்களே அசுத்த சைவமாகிய சரியை கிரியை ஆகிய இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.
வேத அந்தம் சுத்தம் விளங்கிய சித்த அந்தம்\nநாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியோர்\nபூத அந்தம் போத அந்தம் ஆக புனம் செய்ய\nநாத அந்தம் பூரணம் ஞான நேயத்தரே
வேதங்களின் எல்லையாக இருக்கின்றவனும் மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில் விளங்குகின்ற எண்ணங்களின் எல்லையாக இருக்கின்றவனும் நாதத்தின் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை கண்டு தரிசித்தவர்கள் அசைகின்ற எண்ணங்கள் இல்லாமல் எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள். ஐந்து பூதங்களுக்கும் எல்லையாக இருக்கின்றவனும் கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனாகவே ஆகுகின்ற பக்குவத்தை பெறுவதற்கான செயல்களை செய்து நாதத்தின் எல்லையாக இருக்கின்ற இறைவனை பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்.
கற்பன கற்று கலை மன்னும் மெய் யோகம்\nமுற் பதம் ஞான முறை முறை நண்ணியே\nசொற் பதம் மேவி துரிசு அற்று மேலான\nதற் பரம் கண்டு உளோர் சைவ சித்தாந்தரே
இறைவனை அடைய வேண்டியதற்கு கற்க வேண்டிய கல்விகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு அதன் மூலம் பெற்ற கலை அறிவின் மிகவும் உன்னதமான உச்ச நிலையில் உண்மையான யோகத்தை அறிந்து கொண்டு அந்த அறிவிற்கு முதல் மூல தன்மையாக இருக்கின்ற ஞானத்தை அடைய வேண்டிய முறைகளை அறிந்து கொண்டு அந்த முறைகளை முறைப்படி கடைபிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு தாம் சொல்லுகின்ற வாக்கில் சத்தியத்தின் தன்மையை கடைபிடித்து தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும் நீங்கப் பெற்று அனைத்திற்கும் மேலாக தானாகவே இருக்கின்ற பரம்பொருளை தரிசித்து அதை தமக்குள்ளேயே உணர்ந்து இருப்பவர்களே சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்.
சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டும்\nசித்தும் அசித்தையும் சேர்வு உறாமே நீத்தும்\nசுத்தம் அசுத்தமும் தோய்வு உறாமே நின்று\nநித்தம் பர சுத்த சைவர்க்கு நேயமே
நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் ஆகிய இவை மூன்றையும் கண்டு உணர்ந்தும், உலக அறிவும் அறியாமையும் சேர்ந்து விடாமல் அதிலிருந்து விலகி இருந்தும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டிலும் மயங்கி விடாமல் உண்மை ஞானத்தில் நின்றும், எப்பொழுதும் பரம்பொருளாகிய இறைவனின் அதி சுத்த நிலையில் இருப்பதே சைவர்களின் பேரன்பு ஆகும்.
ஊரும் உலகமும் ஒக்க பணைக்கின்ற\nபேர் அறிவாளன் பெருமை குறித்திடில்\nமேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழும்\nதாரணி நால் வகை சைவமும் ஆமே
அனைத்து உயிர்களையும் அவை இருக்கின்ற உலகத்தையும் ஒன்றாக கலந்து நின்று இயக்குகின்ற பேரறிவு ஞானமாக இருக்கின்ற இறைவனின் பெருமைகளை குறித்து சொல்லப் போனால் அனைத்து சக்திகளின் மொத்த உருவமாகிய மேரு மலையயும் மேலோகம் பூலோகம் பாதாள லோகம் ஆகிய முன்று உலகங்களையும் ஆளுகின்ற இறைவனை தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி அவனிடமிருந்தே வெளிவந்து அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற நான்கு வகையான நெறிமுறைகளே சைவம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்.
ஆனை மயக்கும் அறு பத்து நால் தறி\nஆனை இருக்கும் அறு பத்து நால் ஒளி\nஆனை இருக்கும் அறு பத்து நால் அறை\nஆனை அங்கு ஓடும் அறு பத்து நாலிலே
இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவின் இறை தன்மையில் கவர்ந்து இழுக்கப்பட்டு வணங்குகின்ற ஆன்மாக்களுக்கு அருளுகின்ற அறுபத்து நான்கு சக்திகள் இருக்கின்றார்கள். இவர்கள் அந்த ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் அறுபத்து நான்கு ஒளிகளாக இருக்கின்றார்கள். இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை சுற்றி காவலாக வீற்றிருக்கின்ற இந்த அறுபத்து நான்கு சக்திகளும் சாதகரை நாடி வருகின்ற ஆன்மாக்களை காத்து அருளுகின்றனர்.
இல் அடைந்தாளுக்கும் இல்லாதது ஒன்று இல்லை\nஇல் அடைந்தானுக்கு இறப்பது தான் இல்லை\nஇல் அடைந்தானுக்கு இமையவர் தான் ஒவ்வர்\nஇல் அடைந்தானுக்கும் இல்லாது இல் ஆனையே
சாதகரின் உள்ளத்தையே கோயிலாக கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு இல்லாதது என்ற எந்த ஒன்றுமே இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு இனி இறப்பது என்கிற நிகழ்வு இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு கண்ணின் இமை போல் உலகத்தை காத்துக் கொண்டு இருக்கின்ற விண்ணவர்கள் அனைவருக்கும் சரிசமம் ஆவார்கள். இறைவனே வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவும் இறைவனைப் போலவே இல்லாத இடம் என்று எதுவும் இல்லை.
கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை\nகண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள் அது\nபண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆம்\nஇன்று என் மனத்து உள்ளே இல் அடைந்து ஆளுமே
உலக செயல்களை புரிந்து கொண்டு பலவிதமான இடங்களில் இறைவியோடு சேர்ந்தே இருக்கின்ற முப்பத்து இரண்டு சக்திகளும் ஆனந்தக் கூத்து ஆடுகின்ற இறைவனின் பேரொளி வடிவத்தையே தரிசித்துக் கொண்டு அந்தந்த இடங்களில் இருந்து உலக நன்மைக்கான காரணத்திற்காக இறைவிக்கு உள்ளே இருந்து அவற்றை செயல் பட வைக்கின்றனர். ஆதிகாலத்திலேயே அனைத்து உயிர்களும் இறைவனை அறிந்து கொண்டு அவனைத் தேடி அடைய வேண்டும் என்ற காரணத்தினால் அருளப்பட்ட வேதங்களை அண்ட சராசரங்கள் முழுவதும் பரவும் படி எடுத்துச் சென்று அங்கெல்லாம் இருக்கின்ற உயிர்களில் இறைவனைத் தேடுகின்ற உயிர்களுக்கு இவர்கள் உதவி புரிகின்றனர். இவர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கின்ற இறைவியே இப்போது இறை நிலையை அடைந்துவிட்ட சாதகரின் மனதிற்கு உள்ளே இருந்து அவரது உள்ளத்தையே தனக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு அவருக்குள் வீற்றிருந்து சாதகரை ஆளுவதின் மூலம் அனைத்தையும் இயக்குகின்றாள்.
குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர்\nநடந்தனர் கன்னிகள் நால் எண்மர் சூழ\nபரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே\nஇருந்தனர் காணும் இடம் பல கொண்டே
இறைவியைச் சுற்றி ஒன்றாக கூடி இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்து இரண்டு பேர் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இறைவியோடு சேர்ந்தே இயங்குகின்ற என்றும் இளமையுடன் இருக்கின்ற கன்னிகளாக நான்கு திசைகளுக்கும் எட்டு எட்டு பேராக மொத்தம் முப்பத்து இரண்டு பேர்களாக இறைவியைச் சுற்றி இருக்கிறார்கள். தாமரை மலரான இறைவியின் செயல்களான இதழ்களில் இந்த முப்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக சேர்ந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரந்து விரிந்து புரிகின்ற அனைத்து செயல்களையும் சாதகர் தாம் அமர்ந்த இடத்திலிருந்தே தமக்குள் தரிசிக்க முடியும்.
பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும்\nதாதை இவளுக்கு தாணுவும் ஆய் நிற்கும்\nமாதை இவளுக்கு மண்ணும் திலதம் ஆய்\nகோதையர் சூழ குவிந்திடும் காணுமே
குழந்தை போல இருக்கின்ற இறைவிக்கு சக்தியின் பரிபூரணமே பேரழகாக இருக்கின்றது. அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும் இறைவிக்கு உறுதுணையாக நிற்கின்றார். இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும் இறைவிக்கு அழகாக பூசிய குங்குமத் திலகம் போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும் அவளைச் சுற்றி ஒன்றாக கூடி இருப்பதை சாதகரால் தரிசிக்க முடியும்.
பொற் கொடியாள் உடன் பூசனை செய்திட\nஅக் களி ஆகிய ஆங்காரம் போய்விடும்\nமற் கடி ஆகிய மண்டலம் தன் உளே\nபிற் கொடி ஆகிய பேதையை காணுமே
தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாக இருக்கின்ற இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து பூஜைகள் செய்து கொண்டு இருக்கும் போது அதில் இறைவி என்னோடு இருக்கின்றாள் என்கிற இன்பமான எண்ணமாகிய அகங்காரம் சாதகரை விட்டு விலகி விடும். அதன் பிறகு சாதகரைச் சுற்றி காவலாக நிலைபெற்று நிற்கின்ற மண்டலத்திற்கு உள்ளேயே சாதகரோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கின்ற கொடியாகவும் குழந்தை போலவும் இருக்கின்ற இறைவியை தமக்குள்ளே சாதகரால் தரிசிக்க முடியும்.
ஆமே அதோ முகம் மேலே அமுதம் ஆய்\nதானே உகாரம் தழைத்து எழும் சோமனும்\nகா மேல் வருகின்ற கற்பகம் ஆனது\nபூ மேல் வருகின்ற பொற் கொடி ஆனதே
உலகத்திலுள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே நின்று இருக்க அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர் இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோ முகம் போல் உலகத்தை தாங்கிக் கொண்டு இருப்பவராகவும், அதற்கு மேலே இருக்கின்ற அமிழ்தமாகவும், அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும், சிறப்பாக எழுந்து வந்து உயிர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும், தமது உடலுக்கு மேலே வந்து கேட்டது அனைத்தும் கொடுத்து அருளும் கற்பகத் தருவாகவும், பூமியின் மேல் வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாகவும் இருக்கின்றார்.
விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம்\nவணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக\nநலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து\nசுணங்கு இடை நின்றவை செல்லலும் ஆமே
நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொண்ட சாதகருக்கு ஆகாயத்தின் நடுவில் நிற்கின்ற அனைத்து தத்துவங்களும் விளங்கிவிடும். அவரை வணங்கிடும் இடத்திலெல்லாம் வாழுகின்ற உயிர்கள் ஆகவே அவரும் இருந்து நலம் தரும் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து அதன் மூலம் அந்த உயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து நரனாக (மனிதனாக) இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க அதற்கு நடுவில் நின்று கொண்டு அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முடியும்.
நின்ற அது புந்தி நிறைந்திடும் வன்னியும்\nகண்ட அது சோதி கருத்து உள் இருந்திட\nகொண்ட அது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு\nவிண்ட வௌகாரம் விளங்கின என்றே
முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற இறைவியே சாதகரின் அறிவு முழுவதும் நிறைந்து இருக்கின்ற அக்னியாகவும் அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற வடிவமே ஜோதியாகவும் தமது கருத்துக்கு உள்ளே வைத்து இடைவிடாமல் ஒரு வருடம் தியானத்தில் இருந்தால் ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொள்ள முடியும்.
கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும்\nநாடு இலி கன்னிகள் நால் ஒன்பதிமரும்\nபூ இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்\nநாள் இலி தன்னை நணுகி நின்றார்களே
எந்தவிதமான தீங்கும் இல்லாமல் சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்தாறு பேர் இருக்கின்றார்கள். சாதகர் தேடி அடைய வேண்டியது இல்லாமல் தாமாகவே இறைவியோடு சேர்ந்து வருகின்ற என்றும் இளமையுடன் இருக்கும் இந்த முப்பத்தாறு சக்திகளும் தமக்கென்று எந்த இடமும் இல்லாதவர்களாக சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின் இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு அதன் உள்ளே வீற்றிருக்கின்றார்கள். இவர்கள் முப்பத்தாறு பேரும் காலம் என்கிற ஒன்று இல்லாதவளாகிய இறைவியை நெருங்கியே நிற்கின்றார்கள்.
அமுதம் அது ஆக அழகிய மேனி\nபடிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே\nகுமுதம் அது ஆக குளிர்ந்து எழும் முத்துக்கு\nஎழுதம் அது ஆகிய கேடு இலி தானே
அமிழ்தமாகவே மாறி இருக்கும் இறைவியின் பேரழகுடைய திருமேனியானது பளிங்குக் கல்லை போலவே உறுதியாக சாதகருக்குள் பரந்து விரிந்து எழுந்து அல்லி மலரைப் போலவே குளிர்ச்சியுடன் மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை முத்துப் போன்ற வடிவமாகவும் உறுதியான கல்லாகவும் ஆக்கி அதற்கு எந்த விதமான தீங்கும் இல்லாத சக்தியாகிறது.
என்று அங்கு இருந்த அமுத கலை இடை\nசென்று அங்கு இருந்த அமுத பயோதரி\nகண்ட கரம் இரு வெள்ளி பொன் மண்டை ஆய்\nகொண்டு அங்கு இருந்தது வண்ண அமுதமே
தம்மை இறைவனாகவே வணங்குகின்ற உயிர்களின் ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று அவர்களுக்குள் இருந்த சாதகரின் ஜோதியானது அமிழ்தம் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு உள்ளே சென்று அங்கே வீற்றிருக்கின்ற அமிழ்தத்தினால் உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியை தரிசித்து அங்கு கரங்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற இரண்டு நாடிகளின் [இடகலை, பிங்கலை] மூலமாக மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று வெள்ளி போன்ற நிறத்தில் மூலாதாரத்துக்கு அருகில் இருக்கும் சுக்கிலத்தோடு உராய்ந்து அதை தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றிகின்றது. அதன் பிறகு அந்த ஜோதியை தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்று ஜோதி வடிவம் கொண்டு அங்கே வீற்றிருக்கின்ற இறைவியோடு கலக்கும் பொழுது அவள் தனது திருமேனி அமிழ்தமாக மாறி அருளுகின்றாள்.
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்\nவிண்ணில் எழுந்து சிவாய நம என்று\nதண்ணில் எழுந்தது காண்பு அரிது என்று தான்\nகண்ணில் எழுந்தது காட்சி தர என்றே
சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்து எழுந்து இருக்கும் ஜோதியே ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும் காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல் படுகின்றது. அதுவே ஆகாயத்தில் எழுந்து வீற்றிருக்கும் போது இறைவனாகவே ‘சிவாயநம’ என்று வணங்குபவர்களுக்கு கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகின்றதாகவும் இருக்கின்றது. இந்த ஜோதியை உருவமாக பார்ப்பது இயலாது என்ற காரணத்தால் உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும் போது சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே எழுந்து வந்து அருள் காட்சியை அருளவும் காரணமாக இருக்கின்றது.
தார் அதின் உள்ளே தயங்கிய சோதியை\nபார் அதின் உள்ளே பரந்து உள் எழுந்திட\nவேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்\nகார் அது போல கலந்து எழு மண்ணிலே
சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே இருந்து சாதகம் செய்ய செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற ஜோதியை சாதகர் இருக்கின்ற உலகத்தில் இருக்கின்ற உயிர்களுக்கு எல்லாம் பரந்து சென்று அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற ஜோதியோடு எழுந்திடும். இதற்கு ஆதாரமாக சாதகரின் உள்ளே சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஜோதியும் அதனோடு ஒன்றாக சேர்ந்து நிற்கும் படி எண்ணிக் கொண்டே இருக்கின்ற சாதகரின் மன வலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாக பொழிவது போலவே சாதகருக்குள்ளிருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற உயிர்களோடும் கலந்து எழுந்து அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகின்றது.
பூசனை சத்திகள் எண் ஐவர் சூழவே\nநேச அவள் கன்னிகள் நால் பத்து நேர் அதாய்\nகாசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள்\nமாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே
இறைவிக்கு சரிசமமாக பூஜிக்க தகுந்த பத்து பொருள்களையும் சூழ்ந்து இருக்கின்ற சக்திகள் நாற்பது பேரும் நேசிக்கின்ற இறைவி அவர்களுக்கு நடுவில் வீற்றிருக்கின்றாள். என்றும் இளமையுடன் இருக்கின்ற இந்த நாற்பது சக்திகளும் இறைவிக்கு சரிசமமாக அருளுபவர்களாக இருக்கின்றார்கள். இறைவியோடு ஒன்றாக சேர்ந்தே இருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு இந்த நாற்பது பேரும் ஒன்றாகக் கலந்து அவளது அருளால் இறைவியையோ அல்லது அவளுக்கு சரிசமமாக இருக்கின்ற பத்து பொருள்களையோ வணங்குகின்ற உயிர்களின் கர்மங்களை தீர்க்கும் போது அதனால் எந்தவிதமான மாசும் வந்து சேர்ந்து விடாமலும் கர்ம வினைகளை தீர்த்து அதனால் உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றார்கள்.
நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்\nபல் மணி நாகம் மழு கத்தி பந்து ஆகும்\nகல் மணி தாமரை கையில் தமருகம்\nபொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே
நன்மையை அருளும் இறைவியின் பத்து திருக்கரங்களில் தூய்மையான ரத்தின மணிகளை பதித்த . திரிசூலமும் . மண்டையோடும் . கிளியும் . பலவிதமான ரத்தின மணிகளை பதித்த நாகமும் . கோடரியும் . கத்தியும் . பந்தும் ஆயுதமாகவும் . கல்லில் ரத்தின மணிகளை பதித்த தாமரை மலரும் . தமருகமும் . தங்கத்தில் ரத்தின மணிகளால் சேர்த்துப் பூட்டிய மாலையும் வைத்து இருக்கின்றாள். இப்படி இறைவியின் திருக்கரங்களில் இருக்கும் பத்து பொருட்களுமே இறைவிக்கு சரிசமமாக பூஜிக்கத் தகுந்தது ஆகும்.
உண்டு ஆம் அதோ முகம் உத்தமம் ஆனது\nகண்ட இச் சத்தி சதாசிவ நாயகி\nகொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்\nஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே
இறைவியின் பேரொளியோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற சாதகரின் ஆன்மாவிற்குள் இறைவியின் அருளால் உருவாகும் சக்தியின் அம்சமே இறைவனின் ஆறாவது முகமான அதோ முகமாக எப்போதும் நிலையாக இருக்கின்ற உன்னதமான இறை நிலை ஆகின்றது. சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியே அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியோடு அசையும் சக்தியாக எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பராசக்தி ஆவாள். அவளுடைய அருளால் சாதகரும் இறை நிலைக்கு சரிசமமாகுவதற்கு எடுத்துக் கொண்ட முகங்கள் ஐந்து முகங்களாகவும் அதனோடு சேர்ந்து இயங்குகின்ற பத்து கரங்களாகவும் ஆகின்றார்.
நின்ற அவள் சத்தி நிறந்த தரம் ஆகவே\nகண்டு இடும் மேரு அணு ஆதி தான் ஆதி\nபண்டைய ஆ நின்ற பகட்டை அறுத்திட\nஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாகுமே
சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் வந்து நிற்கின்ற இறைவியானவள் பராசக்தியாக சாதகருக்குள் முழுவதும் நிறைந்து மிகவும் உயர்ந்த நிலையில் தமக்குள் செயல் படுவதை சாதகர் தரிசித்து தமக்குள் அவளை வைத்து வணங்கும் போது சாதகரின் உடலையே மொத்த சக்தி மயத்தின் உருவமான மேரு மலையாகக் கொண்டு அவள் செயல்படுகின்றாள். இப்படி சாதகருக்குள் செயல்படுகின்ற பராசக்தியான இறைவியே அவருக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் ஆதியாகவும் அவருக்கு வெளியில் அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்திற்கும் ஆதியாகவும் இருக்கின்றாள். அப்போது பேரொளி வடிவமாகிய இறைவியோடு ஜோதி வடிவமாகிய தனது ஆன்மாவும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதை தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களுக்கு அசையா சக்தியாகிய பரம்பொருளில் இருந்து முதன் முதலில் ஆசையினால் பிரிந்து வந்த சாதகரின் ஆன்மாவுக்கு உள்ளே இறைவனை விட்டு பிரிவதற்கு முழுமுதல் காரணமாகவும் ஆணி வேராகவும் இருக்கின்ற ஆசையை முழுவதுமாக அறுத்து மீண்டும் இறைவனோடு சேருவதற்கான வழியை உருவாக்கி அருளுகின்றாள் இறைவி.